புதுக்கோட்டையில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் பனை விசிறி தயாரிக்கும் தொழிலாளர்கள்

புதுக்கோட்டையில் கொரோனா ஊரடங்கு காரணமாக பனை விசிறி தயாரிக்கும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.

புதுக்கோட்டையில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் பனை விசிறி தயாரிக்கும் தொழிலாளர்கள்
பனை விசிறி தயாரிக்கும் தொழிலாளர்கள்.
  • Share this:
புதுக்கோட்டை மாவட்டத்தில் பேரையூர், கீழக்காடு பகுதிகளில் பனை விசிறி தயாரிக்கும் தொழிலில் அதிக குடும்பங்கள் ஈடுபட்டு வந்தனர். கோடை காலத்தில் அதிக அளவில் விற்பனையாகும் விசிறி கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக விற்பனை ஆகவில்லை என தொழிலாளர்கள் வேதனையில் உள்ளனர்.

மேலும், கால மாற்றத்திற்கு ஏற்ப விசிறிகளின் வடிவமைப்புகளை மாற்றி விற்பனை செய்தாலும் மக்களிடம் வரவேற்ப்பு இல்லை என்றும் மக்கள் அதிக அளவில் மின்விசிறிகளைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டதால் குறைந்த அளவே விசிறிகள் விற்கப்படுவதாகவும் கூறுகின்றனர்.

பேரையூர் கீழக்காடு பகுதியில் 10 ஆண்டுக்கு முன்பு வரை இந்தத் தொழிலை 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் செய்து வந்ததாகவும் அப்போது பனை விசிறி மக்களிடையே வரவேற்பையும், தங்களுக்கு போதுமான வருமானத்தையும் பெற்றுத் தந்தாகத் தெரிவிக்கின்றனர்.


மேலும், இன்றைய சூழலில் அக்கிராமத்தில் 20க்கும் குறைவான குடும்பங்கள் இத்தொழிலில் ஈடுபட்டுவருவதாகவும் அதற்குக் காரணம் அக்கிராமத்தில் உள்ள பனை மரங்கள் பல்வேறு தேவைகளுக்கு அழிக்கப்பட்டு வருவதால் பனை ஓலைகளுக்கு பல கிலோமீட்டர் தூரம் அலைய வேண்டிய நிலை உள்ளது என்றும், அதை விற்பதிலும் தங்களுக்கு பெரும் சிரமம் உள்ளதாகவும் கூறுகின்றனர்.

Also see:
தற்போது செய்த விசிறிகளை ஊரடங்கு உத்திரவினால் சந்தையில் கொண்டு விற்கவோ மற்றும் வெளி மாவட்டங்களுக்கு கொண்டு சென்று விற்கவோ முடியாத நிலையில் உள்ளது. தமிழக அரசு இவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு பனை ஒலை விசிறி செய்யும் தொழிலாளர்களுக்கு போதுமான உதவிகளைச் செய்து வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும்.
First published: June 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading