Home /News /tamil-nadu /

ஊரடங்கால் வருவாயின்றி தவிக்கும் கூலித் தொழிலாளர்கள் நிறைந்த கிராமம்!

ஊரடங்கால் வருவாயின்றி தவிக்கும் கூலித் தொழிலாளர்கள் நிறைந்த கிராமம்!

கிராம மக்கள்

கிராம மக்கள்

இந்த வறுமையிலிருந்து மீள தமிழக அரசும் தன்னார்வலர்களும் எங்களுக்கு உணவுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களையாவது வழங்க வேண்டும் என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
நாடு முழுவதிலும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பல்வேறு தரப்பினரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டத்திலும் ஊரடங்கு பலரையும் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் மேலகாயாம்பட்டியில் 60 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பிரதான தொழிலாக மரம் வெட்டுவது, விவசாய வேலை செய்வது உள்ளிட்ட தினக்கூலி வேலைக்குச் செல்பவர்கள். அதிலிருந்து கிடைக்கும் 100 முதல் 200 ரூபாய் வரை வருவாயை வைத்து தங்களது வாழ்க்கையை நடத்துபவர்கள். ஆனால், தற்போது வேலை வாய்ப்பின்றி, வருமானமின்றி, அத்தியாவசியச் செலவுக்குக்கூட பணம் இல்லாமல் அல்லல்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு பால், பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களை வாங்கிக் கொடுக்கவே பணம் இல்லாமல் தவித்து வருகிறோம் என்கின்றனர். அரசு சார்பில் ஆயிரம் ரூபாய் பணமும் அரிசியும் கொடுத்தாலும், அது எவ்வளவு நாள் இருக்கும் என வினவும் அவர்கள் 40 நாட்களாக தொடர்ந்து ஊரடங்கு நீடித்து வருவதால் தங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது என கூறுகின்றனர்.

மேலும், இந்த வறுமையிலிருந்து மீள தமிழக அரசும் தன்னார்வலர்களும் எங்களுக்கு உணவுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களையாவது வழங்க வேண்டும் என்று வேதனையுடன் தெரிவித்தனர்.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see:
Published by:Rizwan
First published:

Tags: Lockdown, Pudukkottai

அடுத்த செய்தி