Home /News /tamil-nadu /

தள்ளாடும் வயதிலும் தளராமல் உழைத்த முதியவர்... ரேஷன் கார்டு இல்லாததால் ஒருவேளை உணவுக்கே சிரமப்படும் அவலம்...!

தள்ளாடும் வயதிலும் தளராமல் உழைத்த முதியவர்... ரேஷன் கார்டு இல்லாததால் ஒருவேளை உணவுக்கே சிரமப்படும் அவலம்...!

புதுக்கோட்டை - அன்வர் பாட்சா

புதுக்கோட்டை - அன்வர் பாட்சா

குடும்ப அட்டை, ஊனமுற்றோர் தொகை கிடைக்க பல முயற்சிகள் செய்தும் பலனளிக்கவில்லை.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
கொரோனாவின் கோரத் தாண்டவத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதிலும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு பல்வேறு தரப்பினரையும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றது.

குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ள  ஊரடங்கால் கூலி தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை பாலநகர் பகுதியை சேர்ந்தவர் அன்வர்பாட்ஷா. 80 வயதான இவர் தினசரி சைக்கிளில் சென்று பழைய பேப்பர், பிளாஸ்டிக் தகரம் உள்ளிட்டவற்றை வாங்கி விற்று பிழைப்பு நடத்தி வந்தார். இவரது மனைவி ரஹ்மத் நிஷா கால் ஊனமுற்று பேச்சும் சரியாக வராத மாற்றுத்திறனாளி. இவர்களது மகன் 24 வயதுடைய சதாம் உசேன், கொரோனா பாதிப்புக்கு முன்னர்தான் ஆட்டோ ஓட்டவே தொடங்கினார்.

இந்நிலையில் கடந்த 25 ஆண்டுகளாக புதுக்கோட்டை பாலநகர் பகுதியில் குடியிருக்கும் அன்வர் பாஷா குடும்பத்தினருக்கு இதுநாள்வரை குடும்ப அட்டை கிடையாது. குடிசை வீட்டில் குடியிருக்கும் இவர்களுக்கு முறையான வீடும் இல்லை வீட்டில் கழிப்பறையும் இல்லை, தினசரி அன்வர் பாட்ஷா கொண்டுவரும் சொற்ப வருமானத்தில் பசியாறி வந்துள்ளனர்.



கடந்த 43 நாட்களாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு, அன்வர் பாட்சா குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தை புரட்டிப் போட்டுள்ளது. ஊரடங்கால் பழைய பேப்பர் எடுக்க செல்ல முடியாமல் தவித்து வரும் அன்வர் பாட்சா தனது குடும்பத்தினருடன் ஒரு வேளை உணவிற்கு கூட வழியின்றி தவித்து வருகிறார். அவரது மகனும் ஆட்டோ ஓட்டுனர் என்பதால் ஆட்டோ ஓட்ட மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளதால் அவர் வருமானமுமின்றி சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.



மேலும் குடும்ப அட்டை இல்லாததால் அரசு கொடுக்கும் ரேஷன் பொருட்களையும் நிவாரணத் தொகையையும் வாங்க முடியாத குடும்பத்தினர் யாரேனும் உதவிக்கு வரமாட்டார்களா என காத்து நிற்கின்றனர். இதுகுறித்து அன்வர் பாஷா கூறுகையில், “திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நான் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை அருகே உள்ள ஓனாங்குடியில் பெண் எடுத்து திருமணம் செய்தேன். எனது மனைவி ரஹ்மத் நிஷா கால் ஊனமுற்று ஒழுங்காக பேச்சும் வராதவர் நான் தினசரி சைக்கிளில் சென்று பழைய பேப்பர் தகரத்தை வாங்கி விற்று அதில் வரும் வருமானத்தை வைத்து எங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தோம்.

தற்போது கொரோனாவால் கடந்த 40 நாட்களுக்கு மேலாக பிழைக்க வழியின்றி தவித்து வருகிறோம். குடும்ப அட்டையும் இல்லாததால் அரசு கொடுக்கும் எந்த நிவாரண பொருட்களும் பணமும் வாங்க முடியவில்லை. அடுத்த வேளை உணவிற்கே வழியின்றி சிரமப்பட்டு வருகிறோம். எனவே எங்கள் குடும்பத்தின நிலையை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் எங்களுக்கு குடும்ப அட்டையும் நிவாரண உதவிகளையும் வழங்கி எங்கள் குடும்பத்தை காக்க வேண்டும் என வருத்தத்துடன் தெரிவித்தார்.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த அக்பரலி கூறுகையில்,  25 ஆண்டுகளாக அன்வர் பாட்சா குடும்பம் இந்த பகுதியில்தான் குடியிருந்து வருகின்றனர் அவர்களுக்கு ரேஷன் அட்டை கூட கிடையாது தள்ளாடும் வயதிலும் அந்த முதியவர் சைக்கிளில் சென்று பழைய பேப்பர் தகரத்தை வாங்கி விற்று அதில் வரும் வருமானத்தை வைத்து பிழைப்பு நடத்தி வந்தார். ஆனால் இந்த கொரோனா அவரது வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி உள்ளது.

குடும்ப அட்டை, ஊனமுற்றோர் தொகை கிடைக்க பல முயற்சிகள் செய்தும் பலனளிக்கவில்லை. இதனால் தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் அன்வர் பாட்சா குடும்பத்தினருக்கு போதிய உதவிகளை செய்ய முன்வர வேண்டும்” என்றார்.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Published by:Sheik Hanifah
First published:

Tags: Lockdown

அடுத்த செய்தி