எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 5 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் ஈடுபட்ட உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டை ஸ்மார்ட் மாநிலமாக மாற்றுவதே அரசின் இலக்கு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னையில் வரும் 11-ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வுசெய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுக அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் பாஜக-வினர் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
ஓட்டல் மற்றும் உணவகங்களில் சேவை வரி வசூலிக்கக் கூடாது என மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 25 வயதான பெண் சிங்கம் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினிடம் நீங்கள் யார் என்று அரசு பள்ளி மாணவி கேள்வி எழுப்பிய ருசிகர சம்பவம் அரங்கேறியது.
புதுக்கோட்டையில் இருந்து சென்று நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 5 பேரிடம் இலங்கை கடற்படை பெட்ரோல், டீசலை பறித்துள்ளது.
சென்னை புது வண்ணாரப்பேட்டையில் பக்கோடாவுக்கு பணம் கேட்ட கடை உரிமையாளரை ரவுடி தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
திருச்சியில் நீர்வள ஆதாரத் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 31,26,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
பேருந்துகளில் நடத்துநர்கள் பயணிகளுக்கு எச்சில் தொட்டு பயணச்சீட்டுகளை வழங்கக் கூடாது என்று போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
அதிமுக என்ற கட்சி இனி தேறாது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் ஆவணப்படத்தின் போஸ்டர் வெளியிட்டதாக அதன் தயாரிப்பாளர் லீனா மணிமேகலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மறைந்த திரைப்பட பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பாடகி லதா மங்கேஷ்கர் ஆகியோருக்கு மரியாதை செலுத்தும் வகையில், அவர்கள் பாடிய பாடல்களை பாடும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இருந்து நடிகர் விக்ரம் கதாபாத்திரத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
மாதவன் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் ராக்கெட்ரி திரைப்படத்தை அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும் என, ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது.
நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட மக்களில் 90 சதவீதம் பேர் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
ஆந்திரப்பிரதேசத்தில் பிரதமரின் ஹெலிகாப்டர் பறந்தபோது, வானில் கருப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்ட சம்பவம், பாதுகாப்பு விதிமீறல் இல்லை என்று மாநில காவல் துறை தெரிவித்துள்ளது.
டெல்லியில் எம்எல்ஏ-க்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோரின் ஊதியத்தை அதிகரிப்பதற்கான மசோதா, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
அக்னிபத் திட்டத்தின்கீழ், விமானப்படையில் சேர்வதற்கு ஆன்லைன் மூலம் பதிவுசெய்வதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மகாராஷ்டிராவில் கனமழையால் ரயில் நிலையத்துக்குள் புகுந்த நீரால், பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். 6 மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தானில் ஆக்சிஸ் வங்கியில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளை. ஆயுதங்களுடன் வந்த 5 பேர் கைவரிசை.
அமெரிக்காவில் சுதந்திர தின அணிவகுப்பின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், ஆறு பேர் உயிரிழந்தனர். 24 பேர் காயமடைந்தனர்.
Must Read : கொரோனா நோயாளிகளில் 5 சதவீதம் பேர்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை கைப்பற்றியது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து மீண்டும் வலைபயிற்சியை தொடங்கியுள்ளார்.
துருக்கியில் நடைபெற்ற பாரம்பரிய மல்யுத்த போட்டியில், "தங்க பெல்ட்" அணிவதற்காக வீரர்கள் உடல்களில் எண்ணெயை பூசிக்கொண்டு வரிந்துகட்டி மல்லுக்கட்டினர்.
விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ரஃபேல் நடால், சிமோனா ஹாலெப் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Fishermen, Headlines, Today news, Top News