மின்சார வயர் அறுந்தது தெரியாமல் முள்வேலியை பிடித்த மருமகள் - காப்பாற்றச் சென்ற மாமியாரும் உயிரிழப்பு

உயிரிழந்த மாமியார் மற்றும் மருமகள்

அறந்தாங்கி அருகே மின்சாரம் தாக்கி மாமியார், மருமகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  அறந்தாங்கியை அடுத்த ஆளப்பிறந்தான் பகுதியைச் சேர்ந்த மகாதேவன் என்பவரது மனைவி ராதிகா, மின்சார வயர் அறுந்திருப்பது தெரியாமல் வீட்டுக்கு வெளியே இருந்த முள்வேலியை பிடித்துள்ளார்.

  இதனால் மின்சாரம் தாக்கி ராதிகா சத்தமிட்ட நிலையில், அவரை காப்பாற்ற வந்த மாமியார் ராஜகோகிலா மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதனால் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  ராதிகாவுக்கு கவின் மற்றும் கதிர் என்ற இரு மகன்கள் உள்ளனர். மாமியார் மற்றும் மருமகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  Published by:Sankar
  First published: