உயிரிழந்த தந்தைக்கு பாதுகாப்பு கவசம் அணிந்தபடி இறுதிச் சடங்கை நிறைவேற்றிய கொரோனா பாதித்த மகன்

புதுக்கோட்டையில் மாரடைப்பால் இறந்த தனது தந்தைக்கு, கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளைஞர், பாதுகாப்பு கவசம் அணிந்தபடி இறுதிச் சடங்கை நிறைவேற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த தந்தைக்கு பாதுகாப்பு கவசம் அணிந்தபடி இறுதிச் சடங்கை நிறைவேற்றிய கொரோனா பாதித்த மகன்
இறுதி ஊர்வலம்
  • News18
  • Last Updated: August 3, 2020, 8:27 AM IST
  • Share this:
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியைச் சேர்ந்த 20 வயது இளைஞருக்கு, கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், அவரது தந்தை தமிழரசன், மாரடைப்பு ஏற்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை மரணமடைந்தார். தகவல் அறிந்து அதிர்ச்சியடைந்த இளைஞர், தனது தந்தைக்கு இறுதிச் சடங்கு செய்ய முடியாது எனக் கூறி கதறி அழுதுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் ஆறுதல் கூறியதோடு, மன நல மருத்துவர்களும் ஆலோசனை வழங்கினர். இருப்பினும், இளைஞர் மன உளைச்சலுக்கு ஆளானதை அறிந்த மருத்துவர்கள், மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

அவர் அனுமதி அளித்ததை அடுத்து, இளைஞருக்கு கவச உடைகளை அணிவித்த மருத்துவர்கள், நிபந்தனைகளுடன் அவரது தந்தைக்கு இறுதிச் சடங்கை செய்ய அனுமதி வழங்கினர். இதையடுத்து, சுகாதாரத்துறையினரின் உதவியோடு ஆம்புலன்ஸ் மூலம் வீட்டுக்குச் சென்ற இளைஞர், தனது தந்தைக்கு அஞ்சலி செலுத்தினார்.


பின்னர், மயானத்திற்கும் சென்று தந்தைக்கு இறுதிச் சடங்கை நிறைவேற்றிவிட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மீண்டும் மருத்துவமனைக்குச் சென்றார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும், ஒரே மகனாக தந்தைக்கு செய்ய வேண்டிய கடமையை இளைஞர் நிறைவேற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவருக்கு உரிய அனுமதி வழங்கிய சுகாதாரத்துறையினருக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
First published: August 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading