Home /News /tamil-nadu /

ஊரடங்கால் ஒரு செங்கல் கூட விற்கவில்லை... வேறு தொழிலும் தெரியாது...! வேதனையை விவரிக்கும் தொழிலாளர்கள்

ஊரடங்கால் ஒரு செங்கல் கூட விற்கவில்லை... வேறு தொழிலும் தெரியாது...! வேதனையை விவரிக்கும் தொழிலாளர்கள்

News 18

News 18

”ஊரடங்கு காலத்தில் விதிவிலக்கு அளித்துள்ள தொழில்களில் செங்கல் தயாரிப்பு தொழிலும் ஒன்று. அதன்படி செங்கல் தயாரித்து அடிக்கி வைத்துள்ளோம். ஆனால் அதை வாங்க யாரும் முன்வரவில்லை”

  • News18
  • 2 minute read
  • Last Updated :
நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த மாதம் 24ம் தேதி முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த உத்தரவால் மாவட்டம் முழுவதிலும் உள்ள கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்வாதாரம் இழந்து செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டம் அடப்பங்காரச்சத்திரம், வடமலாப்பூர், முத்துடையான்பட்டி, மேலூர், எல்லை பட்டி வடசேரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் செங்கல்சூளையை நம்பி பிழைத்து வருகின்றனர்.

மேலும் இந்த செங்கல் சூளைகளில் 500-க்கும் மேற்பட்டோர் தினசரி கூலித் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். அமலில் உள்ள ஊரடங்கு, செங்கல் தயாரிப்பு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை புரட்டிப் போட்டுள்ளது.

கடந்த 40 நாட்களாக செங்கல் விற்பனை இன்றி வருமானமின்றி வாழ்வாதாரம் இழந்து. செங்கல் தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர். மேலும், செங்கல் தயாரிக்க தேவையான மண் போதிய அளவில் கிடைக்காததாலும், விறகு உள்ளிட்ட மூலப் பொருட்கள் கடுமையாக விலை உயர்ந்துள்ளதாலும், கூலி ஆட்கள் கிடைக்காததால் செங்கல் தயாரிப்பு தொழில் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்ததாகவும், தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு இதுநாள் வரை எங்கள் வாழ்க்கையில் சந்திக்காத வகையில் எங்கள் தொழிலை முடக்கி உள்ளதாகவும் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.



மேலும், ஊரடங்கு காலத்தில் விதிவிலக்கு அளித்துள்ள தொழில்களில் செங்கல் தயாரிப்பு தொழிலும் ஒன்று. அதன்படி செங்கல் தயாரித்து அடிக்கி வைத்துள்ளோம். ஆனால் அதை வாங்க யாரும் முன்வரவில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர் செங்கல் தொழிலாளர்கள்.

”அடபங்காரச்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக செங்கல் தயாரிக்கும் தொழிலை செய்து வருகிறோம். எங்களுக்கு இந்த தொழிலை விட்டால் வேறு ஏதும் தொழில் தெரியாது. எங்கள் தொழில் என்பது ஆறு மாதம்தான். வெயில் காலங்களில் செங்கல் தயாரிப்பு தொழிலில் இருக்கும். மழைக்காலங்களில் ஆறுமாதம் தொழிலின்றி இருப்போம்.

ஆறு மாதம் ஈட்டிய வருவாயை வைத்து எங்கள் வாழ்க்கையை மீதமுள்ள ஆறு மாதமும் நடத்திவருவோம். ஆனால் தற்போது எங்களுக்கு தொழில் உள்ள கோடைகாலத்தில் கொரோனாவால் போடப்பட்டுள்ள ஊரடங்கு எங்கள் தொழிலை முழுமையாக முடக்கியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் தயார் செய்யப்பட்ட லட்சக்கணக்கான செங்கல் தேக்கம் அடைந்துள்ளது. ஊரடங்குக்கு முன்பு ஒரு செங்கல் ஐந்து ரூபாய் வரை விற்பனையானது. ஆனால் தற்போது ஒரு செங்கல் கூட வாங்க யாரும் முன்வரவில்லை.

பொறியாளர்கள் சிலர்  எங்களிடம் செங்கல் எடுத்து செல்வார்கள் அவர்களுக்கும் தற்போது போடப்பட்டுள்ள ஊரடங்கால் வேலை ஏதும் இல்லாததால் அவர்களும் செங்கல் வாங்க முன்வரவில்லை. அதையும் மீறி லாரிகள் மூலம் செங்கல் ஏற்றிச் சென்றால் வழியில் காவல்துறையினர் கெடுபிடியாக பிடித்து வருகின்றனர். இதற்கு அஞ்சியே பலர் செங்கலை ஏற்ற வருவதில்லை. மேலும் வெயிலில் வேர்வை சிந்தி உழைத்து நாங்கள் தயாரித்த செங்கல் அனைத்தும் தேக்கம் அடைந்துள்ளது.

வெயில் காலத்தில் மட்டுமே எங்களது தொழில் இருக்கும். திடீரென்று மழை பெய்தால் தயாரித்து வைத்த அனைத்து செங்கலும் அழிந்துவிடும். அதனையும் மீறி தான் நாங்கள் தொழில் செய்து வருகிறோம். செங்கல் விற்பனை இல்லாததால் வருவாய் இன்றி அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூட பணம் இல்லாமல் இதுவரை, எங்கள் வாழ்க்கையில் சந்திக்காத வறுமையை சந்தித்து வருகிறோம்.

எங்கள் நிலையை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் எங்களுக்கு தேவையான உதவிகளை செய்து எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என வேதனையுடன் கோரிக்கை வைத்துள்ளனர் செங்கல் தயாரிப்பு தொழிலாளர்கள்.








சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Published by:Sankar
First published:

Tags: Lockdown

அடுத்த செய்தி