பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை - பையில் வைத்து மரத்தில் தொங்கவிடப்பட்ட கொடூரம்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பிறந்து மூன்று நாள் ஆன பெண் குழந்தை, புளிய மரத்தில் தொங்கிய கட்டை பையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது

பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை - பையில் வைத்து மரத்தில் தொங்கவிடப்பட்ட கொடூரம்
கைப்பற்றப்பட்ட பச்சிளம் குழந்தை
  • News18
  • Last Updated: August 27, 2020, 3:57 PM IST
  • Share this:
புதுக்கோட்டை மாவட்டம் இளங்குடிபட்டியில் பிறந்து 3 நாட்களே ஆன பெண் குழந்தையை ஜவுளிக்கடை பையில் வைத்து புளியமரத்தில் தொங்கவிட்டுச் சென்றுள்ளனர். குழந்தையின் அழுகுரல் கேட்டு பொதுமக்கள் கொடுத்த தகவலை அடுத்து வந்த நமணசமுத்திரம் போலீசார், குழந்தையை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த 11-ஆம் தேதி கீரமங்கலம் அருகே இதே போன்று ஜவுளிக்கடை பையில் வைத்து ஆண் குழந்தை ஒன்று விட்டுச்செல்லப்பட்டது. இவ்வாறு புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த சிசுக்களை நிர்கதியாய் விட்டுச்செல்வது தொடர்கதையாகி வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் குழந்தையை விட்டுச்சென்றவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


 
First published: August 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading