Home /News /tamil-nadu /

முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியைப் பின்பற்றினால் ஒரு கிலோ பரங்கிக்காய் இலவசம் - புதுக்கோட்டை நகராட்சி

முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியைப் பின்பற்றினால் ஒரு கிலோ பரங்கிக்காய் இலவசம் - புதுக்கோட்டை நகராட்சி

விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான இந்தப் புதிய முயற்சி அனைவரது மத்தியிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான இந்தப் புதிய முயற்சி அனைவரது மத்தியிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான இந்தப் புதிய முயற்சி அனைவரது மத்தியிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
முகக்கவசம் அணிவதுடன் தனிமனித இடைவெளியையும் பின்பற்றினால் ஒரு கிலோ பரங்கிக்காய் இலவசம் என புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் அறிவிப்பு வெளியிட்டு அதை நடைமுறைப்படுத்தியும் உள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. இருப்பினும் இதுவரை 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் இருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 5 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனாவைத் தடுக்க பொதுமக்கள் தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தொடர்ந்து நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள காய்கறி மார்க்கெட் பகுதிக்கு தினசரி ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அவ்வாறு வந்து செல்லும் மக்களிடம் புதிய முறையில் புதுக்கோட்டை நகராட்சி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

நகராட்சி ஆணையர் ஜீவசுப்பிரமணியன் காய்கறி வாங்க வரும் மக்கள் முகக்கவசம் அணிந்து ஒரு மீட்டர் தனிமனித இடைவெளியைப் பின்பற்றி காய்கறி வாங்கினால் ஒவ்வொருவருக்கும் ஒரு கிலோ பரங்கிக்காய் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அந்த அடிப்படையில் இன்று காலை முதன்முறையாக நிபந்தனைகளைப் பின்பற்றி வரும் பொதுமக்களுக்கு பரங்கிக்காய் வழங்கப்பட்டு வருகின்றது.

முகக்கவசம் அணிய வேண்டும் தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டுமென பல்வேறு தரப்பினரும் பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் நகராட்சி நிர்வாகம் இலவசமாக பரங்கிக்காய் வழங்கும் என்று கூறி இந்தப் புதிய முயற்சியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது அனைவரது மத்தியிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see:
Published by:Rizwan
First published:

Tags: Lockdown, Pudukkottai

அடுத்த செய்தி