Home /News /tamil-nadu /

கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று மாயமான புதுக்கோட்டை மீனவர்கள்.. தீவிர தேடுதல் பணியில் கடலோர காவல்படை

கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று மாயமான புதுக்கோட்டை மீனவர்கள்.. தீவிர தேடுதல் பணியில் கடலோர காவல்படை

மீன்பிடி படகு

மீன்பிடி படகு

Pudukkottai : 20 நாட்டுப்படகுகளில் 50 க்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் ஒரு விசைப்படகுடன் கடலுக்குள் சென்ற கடலோர காவல்படையினர், மாயமான மீனவர்களை தேடி வருகின்றனர்.

    மணமேல்குடி அருகே பொன்னகரம் மீனவ கிராமத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிகச் சென்ற 4 மீனவர்கள் மாயம், அவர்களை தேடும்  பணியில் கடலோர காவல்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே பொன்னகரம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் உலகுசுந்தரம், இவரது நாட்டுப் படகில் குமாரராஜா (44), மோகனசுந்தரம் (42), யுவராஜ் (39), ராஜ் (30) ஆகிய 4 மீனவர்கள், 4 நாட்களுக்கு முன்பு கடலில் விரிக்கப்பட்ட நண்டு வலையை எடுக்க நேற்று காலை நாட்டுப்படகில் சென்றுள்ளனர்.

    சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் போடப்பட்ட நண்டு வலையை எடுத்துக் கொண்டு 5 மணி அளவில் கரை திரும்ப வேண்டிய மீனவர்கள், நீண்ட நேரமாகியும் கரை திரும்பவில்லை. சந்தேகமடைந்த உறவினர்கள், கடலோரக் காவல் படையினருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, சக மீனவர்களின் உதவியோடு 2 படகுகளில் கடலுக்குள் தேடிச் சென்றுள்ளனர்.

    அங்கு குறிப்பிட்ட பகுதிகளில் தேடிப்பார்த்தும் மீனவர்கள் மற்றும் படகை கானாததால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், சக மீனவர்கள் ஏமாற்றத்துடன் நேற்று இரவு கரை திரும்பியுள்ளனர். இந்நிலையில் இன்று காலை மீண்டும் கடலோர காவல்படையினர் சக மீனவர்களின் உதவியோடு 20 நாட்டுப்படகுகளில் 50 க்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் ஒரு விசைப்படகுடன் கடலுக்குள் தேடிச் சென்றுள்ளனர்.

    நேற்று காலை முதலே கடலில் காற்றின் வேகம் அதிகமாக கானப்பட்டதால், நான்கு மீனவர்களும் காற்றின் வேகத்தில் வேறு எங்காவது இழுத்துச் செல்லப்பட்டனரா, அல்லது படகின் இயந்திரம் பழுதாகி எங்காவது நடுக்கடலில் தத்தளிக்கின்றனரா என்ற கோணத்தில் கடலோரக் காவல்படையினர் தேடுதல் பணியை முடுக்கிவிட்டுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதுகுறித்து மீனவர்களின் உறவினர்கள் தெரிவிக்கையில், அன்றாட கடன் வாங்கிதான் தொழிலுக்கு போகிறோம், இயற்கை சீற்றத்தாலும் படகு பழுதடையும் காரணத்தாலும் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. நேற்று கடலுக்கு சென்ற நான்கு மீனவர்களின் நிலைமை என்னவாயிற்து என்று தெரியவில்லை, நான்கு பேரும் கடலுக்கு சென்று மாயமானதால் கிராமமே கண்ணீரில் மூழ்கி உள்ளதாக உருக்கமுடன் தெரிவித்தனர்.

    Must Read : தங்கத்தோடு போட்டிபோடும் தக்காளி.. கிலோ ரூ.100க்கு விற்பனை..! - கலக்கத்தில் இல்லத்தரசிகள்

    ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 மீனவர்கள் உட்பட 4 மீனவர்கள் மாயமாகியுள்ள சம்பவம் அப்பகுதி மீனவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர் - ராஜசேகரன், அறந்தாங்கி.
    Published by:Suresh V
    First published:

    Tags: Fishermen, Pudukkottai

    அடுத்த செய்தி