புதுக்கோட்டை மச்சுவாடி அருகே வீட்டிற்குள் புகுந்த மலைப்பாம்பை அப்பகுதி இளைஞர் ஒருவர் துணிவோடு பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்த நிகழ்வு மக்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றது.
புதுக்கோட்டை மச்சுவாடி அருகே பெக்சல் நகர் பகுதியில் பாலாஜி என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டின் அருகே குளம் ஒன்றும் தைல மரக்காடும் உள்ள நிலையில் நேற்று இரவு பாலாஜியின் வீட்டிற்குள் மலைப்பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்புதுறையினர் மற்றும் வனத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். மலைப்பாம்பு வீட்டைச்சுற்றி அங்கும் இங்கும் நெலிந்து திரிந்ததால் வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர்.
Also Read: தடுப்பூசி போடாதவர்களுக்கு ரேஷன் கிடையாது.. பொது இடங்களுக்கு செல்லவும் தடை
இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த சேகர் என்ற இளைஞர் துணிவோடு அந்த பாம்பை பிடித்துள்ளார். மின் வாரியத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றும் சேகர் அப்பகுதியில் இதேபோல் பாம்புகள் வீடுகளுக்குள் புகும்போது அதனை லாவகமாக பிடித்துள்ளார் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே,பிடிபட்ட 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சாக்குப்பையில் கட்டியுள்ளன. தகவல் அறிந்து வந்த வனத்துறையினரிடம் அந்த பாம்பு ஒப்படைக்கப்பட்டது.
புதுக்கோட்டை நகர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் மழையின் காரணமாக அருகே இருந்த வனப்பகுதியிலிருந்து மலைப்பாம்பு பாலாஜி என்பவரின் வீட்டிற்கு வந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்தியாளர் : ரியாஸ் (புதுக்கோட்டை)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Forest, Forest Department, Python, Tamil News, Tamilnadu