Home /News /tamil-nadu /

புதுக்கோட்டையில் ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்திய இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

புதுக்கோட்டையில் ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்திய இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

Sexual Harassment : சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை சென்று விஜயை கைது செய்து சிறுமியை மீட்டனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் 17 வயது சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி கடத்திச்சென்ற இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை, 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. மேலும் அந்த சிறுமிக்கு அரசு சார்பில் 25,000 ரூபாய் நிவாரணம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கே.வி.எஸ் தெருவைச் சேர்ந்த விஜய் என்ற 24 வயது இளைஞர் கடந்த 2020ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி சிறுமியின் வீட்டிலிருந்து விஜய் பணிபுரியும் சென்னையில் உள்ள அலுவலகத்திற்கு கடத்திச் சென்றுள்ளார்.

    இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் துறையினர் விஜய் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சென்னை சென்று விஜயை கைது செய்து சிறுமியை மீட்டனர்.
    இந்நிலையில் இந்த வழக்கானது புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் விஜய் மீது சுமத்தப்பட்ட குற்றம் உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 40 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி சத்யா தீர்ப்பளித்தார்.

    ALSO READ |  கலைஞர் வழியில் முதல்வர் ஸ்டாலின் சமூக நீதியை பாதுகாத்து வருகிறார் - சபாநாயகர் அப்பாவு
     மேலும் சிறுமிக்கு அரசு சார்பில் இருபத்தி ஐயாயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து விஜய் போலீசார் பாதுகாப்போடு திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளார்.

     

    செய்தியாளர் : ர.ரியாஸ்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Chennai, Pudukottai, Sexual harassment

    அடுத்த செய்தி