புதுக்கோட்டை குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த தாயை உலக்கையால் அடித்து கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பி ஓடிய வளர்ப்பு மகனை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை அண்டகுலம் சாலையில் உள்ள ராசாபட்டியை சேர்ந்தவர் சன்னாசி. இவரது மனைவி வீரம்மாள்(வயது 45). இவர்களுக்கு குழந்தை இல்லாததால் செல்வராஜ்( வயது 28) என்பவரை கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தத்தெடுத்து தனது சொந்த மகனாக வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சன்னாசி இறந்துவிட்ட நிலையில், செல்வராஜ் சென்னையில் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். அவ்வப்போது ராசாப்பட்டிக்கு வந்து வீரம்மாளிடம் செலவுக்கு பணம் வாங்கிச் சென்று தேவையற்ற செலவு செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று செல்வராஜ் மீண்டும் சொந்த ஊருக்கு வந்து வீரம்மாளிடம் குடிப்பதற்காக பணம் கேட்டுள்ளார். அதற்கு, வீரம்மாள் பணம் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்திஅடைந்த செல்வராஜ், வீட்டில் உள்ள குளியலறையில் குளித்துக்கொண்டிருந்த வீரம்மாளை உலக்கையால் அடித்துள்ளார். இதில் வீரம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததையடுத்து செல்வராஜ் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இந்தத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வெள்ளனூர் போலீசார் குளியளறையில் சடலமாக கிடந்த வீரம்மாளின் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வெள்ளனூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து வீரம்மாளை கொலை செய்து விட்டு தப்பி சென்று தலைவமறைவான அவரது வளர்ப்பு மகன் செல்வராஜை தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை அருகே தத்தெடுத்து வளர்த்து வந்த மகனே குடிப்பதற்கு பணம் தராததால் தாயை உலக்கையால் அடித்து கொடூரமான முறையில் கொன்ற நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் : ரியாஸ் (புதுக்கோட்டை)
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.