Home /News /tamil-nadu /

விஜயபாஸ்கரின் கொம்பன் காளை பிடிபட்டதா? - விராலிமலை ஜல்லிக்கட்டில் மோதல், பரபரப்பு

விஜயபாஸ்கரின் கொம்பன் காளை பிடிபட்டதா? - விராலிமலை ஜல்லிக்கட்டில் மோதல், பரபரப்பு

விராலிமலை ஜல்லிக்கட்டு

விராலிமலை ஜல்லிக்கட்டு

Viralimalai Jallikattu : விராலிமலை ஜல்லிக்கட்டில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வெள்ளை கொம்பன் காளை பிடிபட்டதா இல்லையா என்ற சர்ச்சை எழுந்தது.

    முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற  கொம்பன் காளையை விராலிமலை ஜல்லிக்கட்டில் அடக்கியதாக கூறினர். இதனால், விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் ஆத்திரம் அடைந்தனர். இதனால், அடக்கியதாக கூறிய வீரரை தாக்க முற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    விராலிமலை மெய்கண்ணுடையாள் அம்மன் சித்திரை திருவிழாவையொட்டி இன்று காலை தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் தற்போதைய விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினருமான விஜயபாஸ்கரின் கொம்பன் காளை 140 வது காளயாக அவிழ்த்து விடப்பட்டது.

    அப்போட்டியில் அவரது இரண்டு களைகள் பங்கேற்றன. இதில் முதலாவது வந்த கருப்பு கொம்பன் காளையை வீரர்கள் அடக்கமுடியவில்லை. இரண்டாவது வந்த வெள்ளைக் கொம்பன் காளையை வீரர்கள் சுற்றி நின்று மாறி மாறி பிடிக்க முயன்றனர்.  இருப்பினும் ஒவ்வொரு வீரரையும் தட்டிவிட்டு சென்ற காளை கடைசியாக ஒரு வீரனிடம் சிக்கியது.

    இந்நிலையில், வர்ணனையாளர் மாடு பிடி மாடு அல்ல என்றும் மாட்டை யாரும் பிடிக்கவில்லை என்றும் வர்ணனை செய்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மாடுபிடி வீரர்கள் மாட்டை பிடித்து விட்டோம் என்று கூறி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் மாடு பிடித்தவரை சூழ்ந்துகொண்டு தாக்க முற்பட்டனர்.

    Must Read : பிரேக் என நினைத்து ஆக்சிலேட்டரை அழுத்திய ஓட்டுனர் - சென்னை பீச் ஸ்டேஷன் ரயில் விபத்து விசாரணையில் திடுக்கிடும் தகவல்

    அப்போது, மாடுபிடி வீரர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியது. இதனை அடுத்து கமிட்டியாளர்கள் மற்றும் காவல்துறையினர் தலையிட்டு விஜயபாஸ்கரின் ஆதரவாளர்களை அப்புறப்படுத்தினர். பல்வேறு போட்டிகளில் வெற்றி கொடி நாட்டிய வெள்ளை கொம்பன் காளையை விராலிமலையில் அடக்கப்பட்தாக அங்கிருந்தவர்கள் பேசிக்கொண்டனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில், ஏழு மாடுபிடி வீரர்கள் காயம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர் - ர.ரியாஸ், புதுக்கோட்டை
    Published by:Suresh V
    First published:

    Tags: Jallikattu, Pudukkottai, Vijayabaskar

    அடுத்த செய்தி