Home /News /tamil-nadu /

சிறப்பாக பணிசெய்த ஆசிரியர்களுக்கு தங்க நாணயம், வெள்ளிப் பதக்கம் வழங்கி கௌரவித்த விஜய் மக்கள் இயக்கம்

சிறப்பாக பணிசெய்த ஆசிரியர்களுக்கு தங்க நாணயம், வெள்ளிப் பதக்கம் வழங்கி கௌரவித்த விஜய் மக்கள் இயக்கம்

விஜய் மக்கள் இயக்கம்

விஜய் மக்கள் இயக்கம்

புதுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஆசிரியர்களுக்கு தங்க நாணயம், வெள்ளிப் பதக்கம் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கியுள்ளனர்.

    புதுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு அர்ப்பணிப்பு உணர்வோடு சேவையாற்றி வரும் ஆசிரியர்களுக்கு தங்க நாணயம், வெள்ளிப் பதக்கம் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கி கௌரவித்துள்ளனர்.

    விஜய் மக்கள் இயக்கத் தலைமையின் அறிவுறுத்தலின்படி சமூக பணியாற்றி வரும் பல்வேறு துறையைச் சேர்ந்தவர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் ஆகியோரை ஊக்குவிக்கும் வகையில் தேர்ந்தெடுத்து வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அவர்களுக்கு தங்க நாணயம் உள்ளிட்ட பரிசுப் பொருட்களை வழங்கி கவுரவிக்க புதுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்க  நிர்வாகிகள் முடிவெடுத்துள்ளனர்.

    அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் வகையிலும் மாணவர்களின் கல்வியில் அதிக அக்கறை கொண்டு அவர்களின் வளர்ச்சிக்காக பாடுபட்ட ஆசிரியர்களை கெளரவிக்கும் வகையிலும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 6 ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தங்க நாணயம் வெள்ளி பதக்கம் மற்றும் கேடயங்களை வழங்கி ஊக்குவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.



    இந்த நிகழ்வில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் பர்வேஸ் தலைமையிலான மக்கள் இயக்க நிர்வாகிகள் பங்கேற்று ஆசிரியர்களுக்கு தங்க நாணயம் உள்ளிட்ட பரிசுப் பொருட்களை வழங்கி அவர்களின் சேவையை பாராட்டினர்.



    தங்களது சேவையை பாராட்டி விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் தங்க நாணயம் உள்ளிட்ட பரிசுப் பொருட்களை வழங்கியதால் அதனைப் பெற்றுக் கொண்ட ஆசிரியர்கள் நெகிழ்ந்து போயினர்.



    இதுகுறித்து விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கூறுகையில், தங்கள் இயக்கத் தலைமையின் உத்தரவுப்படி வாரந்தோறும் சமூகத்திற்காக பங்காற்றி அவர்களுக்கு தங்க நாணயம் உள்ளிட்ட பரிசுப் பொருட்களை வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

    இதையும் படியுங்கள் : 'திமுக எம்.எல்.ஏ அரசகுமார் தம்பி கமிஷன் கேட்கிறார்' - பாதுகாப்பு கேட்டு டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்

    அவர்களின் சேவையை பாராட்டி ஊக்குவிக்க உள்ளதாகவும் அதன் அடிப்படையில் இன்று கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆசிரியர்களைப் போற்றும் வகையிலும் மாணவர்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் ஆசிரியர்களுக்கு தங்களால் முடிந்த பரிசுப் பொருட்களை வழங்கி கௌரவித்து உள்ளதாகவும் இனிவரும் வாரங்களிலும் சமூகப் பணி யாற்றும் நபர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இது போன்று தங்க நாணயம் உள்ளிட்ட பரிசுப் பொருட்களை வழங்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Vijay

    அடுத்த செய்தி