புதுக்கோட்டையில் குரங்குகளின் பசி, தாகத்தைப் போக்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!

விஜய் மக்கள் இயக்கத்தினர்

கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் அப்பகுதியில் உள்ள குரங்குகள் தண்ணீர் மற்றும் உணவு மிகுந்த சிரமப்பட்டு வருகிறது

 • Share this:
  புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி அருகே பல வருடங்களாக ஆஞ்சநேயர் கோவில் ஒன்று இருந்து வருகிறது.  இந்த ஆஞ்சநேயர் கோவில், அப்பகுதியில் பல வருடங்களுக்கு முன்பு 54- குரங்குகள் ஒரே இடத்தில் இறந்து கிடந்ததை பார்த்த அப்பகுதியில் உள்ள பொது மக்கள் ஒன்று சேர்ந்து இந்த ஆஞ்சநேயர் கோவிலை கட்டி 54ன்கு ஆஞ்சநேயர் ஆலயம் என பெயர் வைத்து  சாமி தரிசனம் செய்து வந்தனர்.

  அதேபோல் அந்த கோவிலை சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகள் வசித்து வருகிறது. வாகனத்தில் வருபவர்கள் சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் தினம்தோறும் உணவு பழங்கள் அந்த குரங்குக்கு வழங்கி வந்தனர்.

  இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் அப்பகுதியில் உள்ள குரங்குகள் தண்ணீர் மற்றும் உணவு மிகுந்த சிரமப்பட்டு வருகிறது என்பதை அறிந்த புதுக்கோட்டை விஜய் மக்கள் இயக்கத்தினர்  அந்த கோவில் அருகே தண்ணீர் தொட்டி ஒன்றை அமைத்து தண்ணீர் தொட்டி அருகே பழங்கள் உணவுகளை வைப்பதற்கு ஒரு மேடையும் அமைத்து இதனை இன்று விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவரும் சிவகங்கை மாவட்ட பொறுப்பாளருமான பர்வேஸ் குரங்குகளுக்கு தண்ணீர் மற்றும் பழங்களை வழங்கி இன்று அதனை துவக்கி வைத்தார்.

  தற்போது உள்ள ஊரடங்கு காலகட்டத்தில் வாயில்லா ஜீவன்களுக்கு நம்மால் முடிந்த உணவுகளை வழங்கவேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தார்.

  தொடர்ந்து இதே போல் சித்தன்னவாசல் சுற்றுலாத் தலத்தில் அதிக அளவில் குரங்குகள் இருப்பதால் அங்கேயும் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் இதுபோன்ற தண்ணீர் தொட்டி மற்றும் உணவு வழங்குவதற்கான இடத்தை விரைவில் அமைப்பதற்கும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என்றும் கூறினார்.

  புதுக்கோட்டை செய்தியாளர் அரவிந்த்
  Published by:Arun
  First published: