Home /News /tamil-nadu /

சொத்து வரி உயர்வால் வீட்டு வாடகை கட்டணம் உயரும் அபாயம் - விஜயபாஸ்கர்

சொத்து வரி உயர்வால் வீட்டு வாடகை கட்டணம் உயரும் அபாயம் - விஜயபாஸ்கர்

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

Ex Minister Vijayabakar | அதிமுகவினரை பழி வாங்குவதை விட்டுவிட்டு மக்கள் நலனில் திமுக அரசு அக்கறை செலுத்த வேண்டும் என முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    தமிழக அரசின் சொத்து வரி உயர்வை கண்டித்தும் இந்த சொத்து வரி உயர்வால் வாடகைக்கு குடியிருப்பவர்கள் வாடகை கட்டணம் உயரும் அபாயம் இருப்பதாகவும் அதனால் உடனடியாக சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி புதுக்கோட்டையில் அதிமுக சார்பில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்துவரி உயர்த்தி உள்ளது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும்  அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சாந்தநாதபுரத்தில் அதிமுக வடக்கு மற்றும் தெற்கு மாவட்டம் சார்பில் விராலிமலை  முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான விஜயபாஸ்கர் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த சொத்து வரி உயர்வால் வாடகைக்கு குடி இருப்பவர்களின் வாடகை கட்டணம் உயரும் அபாயம் இருப்பதாகவும் இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறி உடனடியாக சொத்து வரியை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ALSO READ |  ரம்ஜானை முன்னிட்டு வளைகுடா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பேரிட்சம் பழங்கள்
     இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், திமுக ஆட்சியில் அதன்‌ கூட்டணிக் கட்சி நிர்வாகிகளே அதிருப்தியில் உள்ளனர், கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை, முதல்வர் வேண்டுமானால் 500 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளதாக கூறலாம், மக்கள் மன்றத்தில் அது எடுபடவில்லை. ஏழை மக்களுக்காக செயல்படுத்தப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.


    8 மாவட்ட விவசாயிகளின் கனவுத் திட்டமான காவிரி வைகை குண்டாறு இணைப்பு திட்டம் முடக்கப்பட்டுள்ளது.

     திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் தான் பாலியல் கொடுமை அதிகரித்து வருகிறது. சட்டம்ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்து விட்டது, வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெரும். அதிமுக நகர்மன்ற உறுப்பினர் மாவட்டக் குழு ஒன்றியக்குழு பேரூராட்சி உறுப்பினர்கள் புறக்கணிக்கணிக்கப்படுகின்றன.




    எனது குடும்பத்திற்கும் எனக்கும் எவ்வளவோ தொந்தரவு கொடுத்தாலும் அனைத்தையும் தாங்கிக் கொண்டு திமுகவை எதிர்த்து போராடுவேன். அதிமுகவினரை பழி வாங்குவதை விட்டுவிட்டு மக்கள் நலனில் திமுக அரசு அக்கறை செலுத்த வேண்டும், எதிரிகளைச் சமாளிப்பது எதிர்க் கட்சியாக இருப்பது எதிர்க்கட்சியாக இருந்து ஆளும் கட்சியினரை எப்படி மாறுவது அதிமுகவினருக்கு தெரியும் என்று பேசினார்.

     

    செய்தியாளர் : ர.ரியாஸ்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: ADMK, Vijayabaskar

    அடுத்த செய்தி