அணில் விழுந்ததில் உயரழுத்த மின்கம்பி அறுந்து பாதிப்பு: பல லட்சம் மதிப்பிலான மின்சாதன பொருட்கள் சேதம்!

அணில் விழுந்ததில் உயரழுத்த மின்கம்பி அறுந்து பாதிப்பு: இருளில் மூழ்கிய கிராமம்; பல லட்சம் மதிப்பிலான மின்சாதன பொருட்கள் சேதம்!

R_TN_ATG_2_12 JUL_ELECTRIC SHOK ISSUE ANILPUBLIC COMPLAINT_VISUAL_A.RAJASEKARAN

  • Share this:
    மின் கம்பிகளில் அணில் ஏறி விளையாடும் போது இரு கம்பிகளில் உரசுவதால் மின் தடை ஏற்படுகிறது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி சொன்ன போது ஏகத்திற்கும் கிண்டல் செய்தனர். தொடர்ந்து மீம்ஸ்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆனால் அமைச்சர் சொன்னது போலவே ஒரு அணில் மின்சாரம் தாக்கி மின்கம்பி அறுந்து விழுந்து ஒரு புதுமணத் தம்பதியின் வீட்டில் இருந்த பொருட்கள் எல்லாம் எரிந்து நாசமானதுடன் 30க்கும் மேற்பட்ட வீடுகளில் டிவி உள்ளிட்ட மின்சாதனப் பொருட்களும் நாசமான சம்பவம் நடந்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள பூவைமாநகர் கிராமத்தில் நேற்று மாலை உயரழுத்த மின்கம்பி ஒன்று அறுந்து வீடுகளுக்கு செல்லும் மின்கம்பிகளில் விழுந்து அதிகமான மின்சாரம் போனதால் அந்த கிராமத்தில் நேற்று திருமண வரவேற்பு முடிந்துள்ள ஆனந்தன் என்பவரின் வீட்டில் படுக்கை அறையில் வைத்திருந்த பல லட்ச ரூபாய் மதிப்புடைய பொருட்கள் கட்டில், ஏசி, மின்சாதன பொருட்கள் உள்ளிட்ட அனைத்தும் எரிந்து சேதமடைந்தன. பெண்ணின் திருமணத்திற்காக வைத்திருந்த வாஷிங்மெஷின், ஃபிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களும் எரிந்து சேதமடைந்தது.

    Also read: கள்ளநோட்டு கொடுத்து மதுவாங்கிய குடிமகன் - உஷாரான டாஸ்மாக் ஊழியர்

    அதே போல அந்த கிராமத்தில் பல வீடுகளில் டிவி, பேன், பிரிட்ஜ், பல்ப்புகள் போன்ற ஏராளமான மின்சாதனப் பொருட்கள் உயரழுத்த மின்சாரத்தால் எரிந்து சேதமடைந்தது.

    இத்தனை பொருட்கள் சேதமடையும் அளவுக்கு உயரழுத்த மின்கம்பி எப்படி அறுந்து விழுந்தது என்று மின்வாரிய அலுவலர்கள் ஆராய்ந்த போது, உயரழுத்த மின்கம்பி இணைக்கப்பட்டிருந்த மின் கம்பத்தில் உள்ள பீங்கான் உருளை அருகே அணில் ஒன்று ஏறி சென்ற போது மின்கம்பியிலும், பீங்கான் இணைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பியிலும் உரசி இருக்கும்.

    இதனால், உயரழுத்த மின்சாரம் ஏற்பட்டு எரிந்து இறந்த அணில் மின்கம்பியிலேயே கிடந்ததால் உயரழுத்த மின்கம்பி அறுந்து கீழே போகும் மின்கம்பிகளில் விழுந்துள்ளது. அதனால், தான் இந்த மின்சேதம் ஏற்பட்டிருக்கும் என்பது தெரியவந்தது. தொடர்ந்து, மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பிகளை இணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    Also read: பட்டாகத்தியால் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடிய இரட்டையர்கள் கைது!

    ஒரு சிறிய அணில் மின்கம்பியில் அடிபட்டு பல லட்சம் மதிப்பிலான மின்சாதனப் பொருட்களை நாசம் செய்திருக்கிறது. பல லட்சம் மின்சாதன பொருட்களை இழந்த அப்பகுதி கிராம மக்கள் அணில் மீது புகார் கொடுக்க ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்களாம்.

    செய்தியாளர் - ராஜசேகரன்
    Published by:Esakki Raja
    First published: