'மதுபாட்டில் தரவில்லை என்றால் கழுத்தை அறுத்து விடுவேன்'.. மிரட்டல் விடுத்த ரவுடி கைது
'மதுபாட்டில் தரவில்லை என்றால் கழுத்தை அறுத்து விடுவேன்'.. மிரட்டல் விடுத்த ரவுடி கைது
மிரட்டல் விடுத்த ரவுடி கைது
Pudukottai: கத்தியை கழுத்தில் வைத்து மதுபாட்டில் தரவில்லை என்றால் கழுத்தை அறுத்து விடுவேன் நான் ஏற்கனவே பல கொலை வழக்கில் தொடர்புடையவர் என்று மிரட்டிய ரவுடியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டையில் உள்ள எலைட் பாரில் காசாளராக பணிபுரிபவரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி மதுபானம் கேட்டதோடு அவர் சட்டைப்பையில் வைத்திருந்த 2 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துச் சென்ற கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்புடைய பாஸ்கர் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை நகர பகுதிக்கு உட்பட்ட டிவிஎஸ் கார்னர் அருகே எலைட் பார் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் பார் மூடும் நேரத்தில் அந்த எலைட் பாருக்கு சென்ற பூங்கா நகர் பகுதியைச் சேர்ந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்புடைய பாஸ்கர் என்பவர் அந்த பாரில் காசாளராக பணிபுரியும் ஐயப்பன் என்பவரிடம் மதுபானம் கேட்ட நிலையில் கடை மூடிய பிறகு மதுபானம் கேட்டால் எப்படி கொடுப்பது என்று ஐயப்பன் கூறியதையடுத்து பாஸ்கர் அவர் கையில் வைத்திருந்த கத்தியை ஐயப்பன் கழுத்தில் வைத்து மதுபாட்டில் தரவில்லை என்றால் கழுத்தை அறுத்து விடுவேன் நான் ஏற்கனவே பல கொலை வழக்கில் தொடர்புடையவர் என்று மிரட்டியதோடு ஐயப்பன் சட்டைப்பையில் வைத்திருந்த 2000 ரூபாய் பணத்தை எடுத்து விட்டு பாஸ்கர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதனையடுத்து இதுகுறித்து ஐயப்பன் புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் பாஸ்கரை தேடிய நிலையில் அரிமளம் பிரிவு சாலையில் பதுங்கியிருந்த பாஸ்கரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் : ர.ரியாஸ்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.