Home /News /tamil-nadu /

பயிற்சியின்போது தலையில் துப்பாக்கி தோட்டா பாய்ந்த சிறுவன் உயிரிழப்பு

பயிற்சியின்போது தலையில் துப்பாக்கி தோட்டா பாய்ந்த சிறுவன் உயிரிழப்பு

சிறுவன் உயிரிழப்பு

சிறுவன் உயிரிழப்பு

5 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில்  கண்காணிக்கப்பட்டு வந்த சிறுவன் புகழேந்தி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தான். சிறுவனின் உயிரிழப்பை கண்டித்து திருச்சி புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    புதுக்கோட்டை  மாவட்டத்தில் துப்பாக்கிச் சுடும் பயிற்சியின்போது  வெளியேறிய தோட்டா அருகில் உள்ள வீட்டில் இருந்த சிறுவனின் தலையில் பாய்ந்தது. ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

    புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அம்மாசத்திரம் அருகே காவல்துறை துப்பாக்கிச் சுடும் பயிற்சி கடந்த  டிசம்பர் 30ம் தேதி  நடைபெற்றது. அப்போது  அங்கிருந்து வெளியேறிய துப்பாக்கித் தோட்டா, அருகே உள்ள வீட்டிலிருந்த 11 வயது சிறுவன் புகழேந்தி தலையில் பாய்ந்தது.

    ஆபத்தான நிலையில் சிறுவன் புகழேந்தி தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். தொடர்ந்து 4 மணிநேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சை மூலம் தலையிலிருந்த குண்டு அகற்றப்பட்டது. இருந்தபோதும் சிறுவனின் இதய செயல்பாடுகள் மட்டுமே இருந்ததாகவும், மூளை செயல்படவில்லை என மருத்துவர்கள் கூறி வந்தனர்.

    துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்ட மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் (சி.ஐ.எஸ்.எப்) மீது புதுக்கோட்டை வெள்ளனூர் காவல் நிலையத்தில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவன் புகழேந்தியின் உடல் நலம் குறித்து, விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

    இதையும் படிங்க: 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக நேரடி பொது தேர்வு நடத்தப்படும்- அமைச்சர் அன்பில் மகேஷ்


    இந்நிலையில்,  5 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில்  கண்காணிக்கப்பட்டு வந்த சிறுவன் புகழேந்தி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தான். சிறுவன் உயிரிழந்த சம்பவம் அவனது உறவினர் மற்றும் ஊர் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  சிறுவனின் உயிரிழப்பை கண்டித்து திருச்சி புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Gun shot, Puthukkottai

    அடுத்த செய்தி