Home /News /tamil-nadu /

டாஸ்மாக் கடை முன்பு பள்ளி மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட போதை ஆசாமிகள்.. கிராமமக்கள் ஆவேசம்

டாஸ்மாக் கடை முன்பு பள்ளி மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட போதை ஆசாமிகள்.. கிராமமக்கள் ஆவேசம்

பாதிக்கப்பட்ட மாணவிகள்

பாதிக்கப்பட்ட மாணவிகள்

Tasmac: மாணவிகளின் பெற்றோர்களும் அங்கு மது குடிக்க வந்தவர்களிடம் உங்கள் பெண் குழந்தைகளுக்கு இது போன்று நடந்தால் பார்த்துக்கொண்டே இருப்பீர்களா என்று கேள்வி எழுப்பி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் அருகே பள்ளி முடித்து வீடு திரும்பிய 2 மாணவிகளை வழியில் இருந்த அரசு டாஸ்மாக் மதுபானக் கடையில் மது அருந்திய நபர்கள் கேலிசெய்து கையை பிடித்து இழுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இச்சம்பவத்தை கண்டித்து மாணவிகளின் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்  குட்டகுளவாய்ப்பட்டியை சேர்ந்த இரண்டு மாணவிகள் நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டு இருந்துள்ளனர்.அவர்கள் வடக்கு காட்டுப்பட்டி எனும் கிராமத்தின் வழியே செல்லும் போது அங்கிருந்த அரசு டாஸ்மாக் கடையில் மது அருந்தியவர்கள்  சிலர் அந்த மாணவிகளை கையை பிடித்து இழுத்து, வாடி, போடி என பேசி கேலி செய்து தொந்தரவுக்கு உள்ளாகியுள்ளனர்.

    Also read:  100 ஆண்டுகால கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பு திட்டம் .. ஒரு பார்வை

    ஆனால் அப்போது அந்த மாணவிகளை காப்பாற்ற அங்கு மது குடிக்க வந்த யாரும் முன் வரவில்லை என்று கூறப்படுகிறது.
    இதனிடையே அவர்களின் பிடியில் இருந்து தப்பிய மாணவிகள் இருவரும் நடந்த சம்பவத்தை அழுதுகொண்டே வீட்டில் போய் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவிகளின் பெற்றோர்கள் அந்த மாணவிகளை அழைத்து கொண்டு சம்பந்தப்பட்ட வடக்கு காட்டுப்பட்டி அரசு மதுபான கடைக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    டாஸ்மாக் கடை முன் பெற்றோர் போராட்டம்


    மாணவிகளின் பெற்றோர்களும் அங்கு மது குடிக்க வந்தவர்களிடம் உங்கள் பெண் குழந்தைகளுக்கு இது போன்று நடந்தால் பார்த்துக்கொண்டே இருப்பீர்களா என்று கேள்வி எழுப்பி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

    இதனையடுத்து அங்கு வந்த போலீசார் மாணவிகளையும் அவர்களது பெற்றோர்களையும் சமரசப்படுத்தி  அனுப்பி வைத்ததோடு இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக மூன்று நபர்களை ஆதனக்கோட்டை காவல் நிலையம் அழைத்து சென்று  விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பள்ளி மாணவிகள் செல்லும் வழியில் வடக்குகாட்டுப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்றக் கோரி பலமுறை மாவட்ட நிர்வாகத்திடமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் மனு கொடுத்து விட்டதாகவும், ஆனால் இதுவரை அரசும் அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்காததால் இது போன்ற பிரச்சினைகள் அடிக்கடி ஏற்படுவதாகவும் இனியாவது அந்த டாஸ்மாக் கடையை மூட வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    செய்தியாளர் ரியாஸ் (புதுக்கோட்டை)
    Published by:Arun
    First published:

    Tags: Pudukottai, Tasmac

    அடுத்த செய்தி