மாணவர்கள், இளைஞர்கள், இளம் பெண்களின் கல்வி, பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில்
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் அரண் இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளது.
இந்த அரண் இயக்கமானது, புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான உரிமைகள், நலன்கள், பாதுகாப்பு, சட்ட உதவி, மனநலம், பாலியல் நலக் கல்வி, உடல் நலம், பாலின சமத்துவம், கற்றல் தொடர்பான வழிகாட்டுதல் மற்றும் உதவிகளை, அனைத்து துறைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு மற்றும் பொது மக்களின் ஈடுபாட்டுடன் உறுதி செய்யும் வகையில் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள இயக்கமாகும்.
மேற்குறிப்பிட்ட காரணங்களுக்காக 1800 425 2411 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு உதவி பெறலாம்.
Also read: சென்னை ஆழ்கடலில் அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள்!
மேலும், 94433 14417 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். கடந்த ஜன.3ம் தேதி முதல் புதுக்கோட்டையில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் முழுவதும் இந்த எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.