Pudukkottai : கொலை வழக்கில் தொடர்புடைய இளைஞர் ஒருவர் ஓட ஓட விரட்டி 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டப்பட்ட சம்பவம் புதுக்கோட்டை நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை நகரப்பகுதியில் இளைஞர் ஒருவரை 5 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை நகரப் பகுதிக்கு உட்பட்ட மச்சுவாடி அருகே உள்ள வண்டிபேட்டை பகுதியை சேர்ந்தவர் அஜித் ( வயது 20). இவர் கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் காமராஜர்புரத்தைச் சேர்ந்த இளைஞர் சம்பத் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையவர். இந்நிலையில் அஜித் நேற்று இரவு புதுக்கோட்டை வடக்கு ராஜவீதி பழனியப்பா கார்னர் அருகே உள்ள ஒரு மதுபான கடைக்கு அவரது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் வந்த நிலையில் அவரை இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி தலை கை முதுகு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து அஜித் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிருக்கு போராடி கிடப்பதை பார்த்த அருகே இருந்தவர்கள் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து அங்கு அஜித் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் அஜித் வெட்டப்பட்டு கிடந்த வடக்கு ராஜவீதி பழனியப்பா கார்னர் பகுதியில் புதுக்கோட்டை நகர துணை காவல் கண்காணிப்பாளர் லில்லி கிரேஸ் தலைமையிலான போலீசார் பார்வையிட்டு அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களில் அஜித் ஓட ஓட விரட்டி வெட்டப்பட்ட காட்சிகள் பதிவாகி உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து அஜித்தை வெட்டிய 5 பேர் கொண்ட கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் அஜீத் ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதால் முன்விரோதம் காரணமாக அஜித்தை வெட்டினார்களா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். ஆள்நடமாட்டம் அதிகம் முக்கிய உள்ள பகுதியில் கொலை வழக்கில் தொடர்புடைய இளைஞர் ஒருவர் ஓட ஓட விரட்டி 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டப்பட்ட சம்பவம் புதுக்கோட்டை நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்: ரியாஸ் (புதுக்கோட்டை)
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.