கணவனை இழந்து நான்கு குழந்தைகளுடன் வறுமையில் வாடும் பெண் ஒருவர், தங்களது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை காக்க, ஏதாவது ஒரு அரசு வேலை வழங்கி உதவ வேண்டும் என, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தை சேர்ந்தவர்கள் முருகேசன் - சீரங்கம் தம்பதி. கூலி தொழில் செய்து வந்த இவர்களுக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆன நிலையில், 3 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனர். இந்த நிலையில், உடல்நலக் குறைவால் கடந்த ஆண்டு முருகேசன் தற்கொலை செய்துகொண்டதால், நிலைகுலைந்த அவரது குடும்பம், தற்போது வறுமையின் பிடியில் சிக்கித்தவித்து வருகிறது.
தற்போது எட்டாம் வகுப்பு படித்து வரும் சீரங்கத்தில் மூத்த மகள் பிரியதர்ஷினி ஆறாம் வகுப்பு படித்துவரும் கீர்த்தனாவும் பருவ வயதை எட்டிவிட அந்த பெண் குழந்தைகளுக்கு தேவையான உடை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத சூழலில் தாய் சீரங்கம் தவிக்கும் காட்சி வார்த்தைகளால் விவரிக்க முடியாத துயரம்.
அதுமட்டுமின்றி தினமும் தேனீர் கேட்டு அடம்பிடிக்கும் கடைசி மகன் கிஷோரின் ஆசையை இந்த ஒரு வருட காலமாக நிறைவேற்ற முடியாமல் சீரங்கம் கண்ணீரில் தனது இயலாமையை உணர்த்தும் சூழல் அந்த சிறுவனுக்கு புரியும் வயது கூட இல்லை.
ஆனால் அந்த குடும்பத்தை தொடர்ந்து வறுமை விரட்டுகிறது. கல்விக்காக மட்டுமின்றி மதிய உணவிற்காக தனது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி தான் பட்டினியாக இருந்தாலும் அவர்களின் பசியை ஒரு நேரமாவது போக்க முடியும் என்ற நம்பிக்கையில் வாழ்வை நகர்த்தி வருகிறார் சீரங்கம்.
நான்கு குழந்தைகளுடன் தவிக்கும் தாய் சீரங்கம், தனது குழந்தைகளின் உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாமல் தவித்து வருகிறார். தமிழக அரசு வழங்கிய இடத்தில் குடிசை அமைத்து பரிதாப நிலையில் வாழ்ந்துவரும் போதும், தாய் சீரங்கம் தனது நான்கு குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பி வருகிறார்.
பங்காரு அடிகளார் முன்பு தரையில் அமர்ந்த அமைச்சர் நேரு - தி.மு.க எம்.பி. செந்தில் குமார் விமர்சனம்?
இதனிடையே தமிழக அரசுதான் கருணைகாட்டி, தனது மகனின் குடும்பத்தை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீரங்கத்தின் மாமியார் ராசம்மா கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.
நாள்தோறும் தேநீர் கேட்டு அடம்பிடிக்கும் தனது தம்பியின் ஆசையைக் கூட தனது தாயாரால் நிறைவேற்ற முடியவில்லை எனவும், தனது தாயாருக்கு தமிழக அரசு வேலை வழங்கி உதவ வேண்டும் என சீரங்கத்தின் மகள்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.