Home /News /tamil-nadu /

தொழிலதிபர் வீட்டில் கொள்ளைபோனது 750 சவரன்.. கிணற்றில் கிடைத்தது 599 சவரன் - தீவிர விசாரணையில் போலீஸ்

தொழிலதிபர் வீட்டில் கொள்ளைபோனது 750 சவரன்.. கிணற்றில் கிடைத்தது 599 சவரன் - தீவிர விசாரணையில் போலீஸ்

புதுக்கோட்டை நகை கொள்ளை வழக்கு

புதுக்கோட்டை நகை கொள்ளை வழக்கு

அறந்தாங்கியில் 750 சவரன் கொள்ளைப்போன வழக்கில் திடீர் திருப்பம் 599 சவரன் மீட்ட போலீஸார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    அறந்தாங்கி அருகே 750 சவரன் நகை கொள்ளை போன சம்பவத்தில் வீட்டின் பின்பக்க கிணற்றிலிருந்து நகையை மீட்ட போலீசார்.

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கோபாலப்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் ஜாபர்சாதிக். இவர் புருனை நாட்டில்
    சூப்பர் மார்க்கெட் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 27ம் தேதி இவரது வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து மர்ம நபர்கள் 750 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். அதனையடுத்து அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து மீமிசல் காவல் துறையினருக்கும் வீட்டின் உரிமையாளர் ஜாபர்சாதிக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

    Also Read: 15 வயது சிறுவனுடன் ஆசிரியைக்கு மலர்ந்த காதல்.. போக்ஸோ சட்டத்தில் கைது

    தகவலின் அடிப்படையில் மீமிசல் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் தீரன் என்ற மோப்ப நாய் உதவியுடன் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்தீபன் நேரில் ஆய்வு மேற்க்கொண்டு சம்பவம் குறித்து கேட்டறிந்தார். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்தீபன் உத்தரவின் பெயரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டது.

    இத்தனிப்படையில் மாவட்ட க்ரைம் குழுவில் 6 பேரும், சப்டிவிசன் குழுவில் 4 பேரும், காவல் நிலையத்திலிருந்து 5 பேர் என மொத்தம் 15 போலீசார் நியமிக்கப்பட்டு தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர். தனிப்படை போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள், அப்பகுதியைச் சேர்ந்த தனித்தனி நபர்கள் மற்றும் பழைய குற்றவாளிகள் ஆகியோரிடம் விசாரணை மேற்க்கொண்டு வந்தனர். இந்நிலையில் உறவினர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் கொள்ளை போன வீட்டின் பின்பக்கத்தில் உள்ள கிணற்றில் காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

    Also Read: பெண்களோடு உல்லாசமாக இருக்க கொள்ளை தொழில்.. பூட்டிய வீட்டை நோட்டமிட்டு கொள்ளையடித்து வந்த கொள்ளையன் கைது.. 95 சவரன் நகைகள் பறிமுதல்

    அப்போது கிணற்றின் மேற்ப்புறத்தில் மூடப்பட்டிருந்த கம்பிக் கதவு லேசாக திறந்திருப்பதைக் கண்டு சந்தேகமடைந்த காவல்துறையினர், கிணற்றிலிருந்த தண்ணீரை வெளியேற்றிப் பார்த்துள்ளனர். அப்போது காணாமல் போன நகை மூட்டையாக கட்டி உள்ளே கிடந்தது தெரிய வந்துள்ளது. அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துணைக்கண்காணிப்பாளர் தினேஷ்குமார், நகை மதிப்பீட்டாளர்கள் முன்னிலையில் நகையை எடை போட்டதில் 559 சவரன் நகை இருப்பது தெரிய வந்துள்ளது.

    ஏற்கனவே 750 சவரன் கொள்ளை போனதாக காவல்துறைக்கு புகார் அளித்துள்ள நிலையில் தற்போது 559 சவரன் நகை மட்டுமே கிடைக்கப்பட்டுள்ளது. எனவே கிடைக்கப்பட்ட நகையை கைப்பற்றிய காவல்துறையினர் காணாமல் போன நகை எவ்வாறு கிணற்றுக்குள் வந்தது, மீதி நகை எங்குள்ளது என்ற பல்வேறு கோணத்தில் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    செய்தியாளர்: ராஜசேகரன் (அறந்தாங்கி)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள், Gold, Police, Pudukkottai, Theft

    அடுத்த செய்தி