ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சமூக மோதலில் முடிந்த செல்ஃபி மோகம்..போலீஸ் குவிப்பு

சமூக மோதலில் முடிந்த செல்ஃபி மோகம்..போலீஸ் குவிப்பு

இரு தரப்பு மோதல்

இரு தரப்பு மோதல்

புகார் கொடுத்துவிட்டு வீடு திரும்புபோது, செல்ஃபி எடுத்துகொண்டிருந்த அந்த இளைஞர்கள் பெண்மணியின் சகோதரர்களை தாக்கியுள்ளனர். இதனையடுத்து பூங்குடி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சாலையில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

புதுக்கோட்டை அருகே செல்ஃபியால் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலால்  பொதுமக்கள் சாலையில்  திரண்டனர்.  ஒரு சமூகத்தை சேர்ந்த இருவரை மாற்று சமூகத்தினர் குளத்தில் உள்ள நீரில் மூழ்கடித்து அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் பூங்குடி ஊராட்சியில் இரு வேறு சமூகத்தினர் பொங்கல் விழா கொண்டாடிய நிலையில் ஒரு சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் சாலையில் நின்று செல்பி எடுத்துள்ளனர். அப்போது,  மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அவரது கணவரோடு சாலையில் சென்றுள்ளனர்.

சாலையில் நின்று செல்பி எடுத்த இளைஞர்களை ஓரமாக நின்று செல்பி எடுங்கள் என்று அந்தப் பெண்ணும் அவரது கணவரும் கூறியதையடுத்து அந்த இளைஞர்கள் அந்த பெண்மணியின் கணவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தனது மனைவியின் சகோதரர்கள் உதவியோடு அந்த பெண்ணின் கணவர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் மனு கொடுத்துள்ளார்.

புகார் கொடுத்துவிட்டு வீடு திரும்புபோது, செல்ஃபி எடுத்துகொண்டிருந்த அந்த இளைஞர்கள் பெண்மணியின் சகோதரர்களை தாக்கியுள்ளனர். இதனையடுத்து பூங்குடி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சாலையில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும்,  புகார் அளித்தவர்களை மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அந்த பகுதியில் உள்ள ஒரு குளத்திற்கு இழுத்துச் சென்று நீரில் மூழ்கடித்து அடித்துள்ளனர்.

இதனையடுத்து அந்த கிராம மக்கள் சிலர் மோதலைத் தடுத்து அமைதியை ஏற்படுத்த முயற்சித்துள்ளனர்.  இந்த மோதலில் காயமடைந்த ஒரு இளைஞர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டதால் பூங்குடி கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டு நடந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

செய்தியாளர்- ரியாஸ்; புதுக்கோட்டை

மேலும் படிக்க: முழு ஊரடங்கு: கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு படையெடுக்கும் மது பிரியர்கள்... போலீசார் திணறல்

First published:

Tags: Pudukkottai, Selfie