Home /News /tamil-nadu /

அரசு மாணவர் விடுதி அருகே மாற்றப்படும் டாஸ்மாக்: எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

அரசு மாணவர் விடுதி அருகே மாற்றப்படும் டாஸ்மாக்: எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்


'டாஸ்மாக் வேண்டாம் என மற்றுமொரு போராட்டம்'

'டாஸ்மாக் வேண்டாம் என மற்றுமொரு போராட்டம்'

TASMAC : ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் செயல்பட்ட டாஸ்மாக் தற்போது கல்வி பயிலும் மாணவர்கள் விடுதி அருகே வருவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகின்றனர். தமிழக அரசுக்கு கடையை திறக்க கூடாது என்ற கோரிக்கையையும் பொதுமக்கள் முன் வைக்கின்றனர்.

மேலும் படிக்கவும் ...
    ஈரோடு மாவட்டத்தை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் குடியிருப்பு பகுதி மற்றும் அரசு மாணவர் விடுதி அருகே டாஸ்மாக் கடை திறப்பதை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் குடியிருப்பு பகுதி மற்றும் அரசு மாணவர் விடுதி அருகே தற்போது அந்த டாஸ்மாக் கடையை மாற்ற முடிவு செய்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    டாஸ்மாக் கடையை குடியிருப்பு பகுதியில் உள்ள அரசு மாணவர் விடுதி அருகேயும் திறக்கக்கூடாது. தற்போது கடை உள்ள இடத்திலேயே அந்த டாஸ்மாக் கடை வைக்க வேண்டும் என்று பலமுறை டாஸ்மாக் நிர்வாகத்திற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் மனு அளித்தும் எந்த பயனும் இல்லை. தற்போது கடையை மாற்றுவதற்கு நடவடிக்கையை டாஸ்மாக் நிர்வாகம் எடுத்து வருகிறது என்று பொதுமக்கள் குற்றன்சாட்டுகின்றனர். இதனால் அதிருப்தி அடைந்த அந்த பகுதி மக்கள் இன்று அரசு மாணவர் விடுதி அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



    இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொண்டனர்.  மேலும் டாஸ்மாக் கடையை குடியிருப்பு பகுதிக்குள் மாற்றக்கூடாது. மாணவர் நலன் கருதி டாஸ்மார்க் கடையைத் திறக்க கூடாது என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அந்த பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க கூடாது என்று தமிழக அரசு ஏற்கனவே சட்டமன்றத்தில் முதல்வர் உறுதி கூறி உள்ளதை சுட்டிக் காட்டி தற்போது பொதுமக்கள் இந்த கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆகவே இந்த கடையை திறக்க கூடாது என்ற கோரிக்கையையும் அவர்கள் முன் வைக்கின்றனர்.

    இதையும் படியுங்கள் : 'திமுக எம்.எல்.ஏ அரசகுமார் தம்பி கமிஷன் கேட்கிறார்' - பாதுகாப்பு கேட்டு டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்

    முன்னதாக டாஸ்மாக் (TASMAC) மதுக்கடையைத் திறக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அதை பரிசீலித்து கடையை திறக்கக்கூடாது என சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.

    செய்தியாளர் : ர.ரியாஸ்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Pudukkottai, Tasmac

    அடுத்த செய்தி