Home /News /tamil-nadu /

ஊரடங்கு.. மொய் விருந்து நடத்த தடை: புதுக்கோட்டை எஸ்பி எச்சரிக்கை

ஊரடங்கு.. மொய் விருந்து நடத்த தடை: புதுக்கோட்டை எஸ்பி எச்சரிக்கை

மொய் விருந்து

மொய் விருந்து

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு முடியும் வரையில் நோய்த்தொற்று பரவலை தடுக்கும் வகையில் மொய் விருந்து விழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட எஸ்பி நிஷா பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

    ஊரடங்கு உத்தரவு முடியும் முறையில் மொய் விருந்து விழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் ,மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் புதுக்கோட்டை எஸ்பி தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தின் தஞ்சாவூர்,புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் மொய் விருந்து வழக்கம் நடைமுறையில் உள்ளது.  பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் தங்களின் நிதி தேவைக்காக மொய் விருந்து நடத்துவார்கள்.  மொய் விருந்து வைப்பவர் சாதி மதம் பேதமின்றி  ஊர் மக்கள் அனைவரையும் மொய் விருந்துக்கு அழைப்பார்கள்.

    விழாவுக்கு வருபவர்களை விழா நடத்துபவர்கள் மாலை அணிவித்து வரவேற்று, ஆடு,கோழி என விதவிதமான  உணவு வகைகளை  பரிமாறுவார்கள்.  மொய் விருந்தில் கலந்துகொள்பவர்கள் சாப்பாடு முடிந்த பின்னர் மொய் வைப்பார்கள். சில இடங்களில் லட்சங்களில் கூட மொய் வைக்கப்படுவது உண்டு. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் புதுக்கோட்டையில் மொய் விருந்து நடத்த  தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்பி  நிஷா பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேட்டியளித்த அவர்,  புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு முடியும் வரையில் நோய்த்தொற்று பரவலை தடுக்கும் வகையில் மொய் விருந்து விழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி மொய்விருந்து நடத்துபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இதையும் படிங்க: முழு ஊரடங்கை முன்னிட்டு டாஸ்மாக் மது விற்பனை ஜோர்... புத்தாண்டு விற்பனையை தாண்டியது


    ஊரடங்கு உத்தரவின்போது பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ளவும் பொதுமக்களுக்கு தேவையான அறிவுரைகளையும் வழங்கவும் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பொதுமக்களும் முக கவசம் தனிமனித இடைவெளி உள்ளிட்ட அரசியல் நடைமுறைகளை பின்பற்றி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இன்றைய  முழு ஊரடங்கு உத்தரவை புதுக்கோட்டை மாவட்ட மக்கள் முறையாக கடைபிடித்து வருகின்றனர் பொதுவெளியில் மக்கள் கூட்டம் இன்றியே காணப்படுகிறது, கடந்த இரு நாட்களில் புதுக்கோட்டை மாவட்ட ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரையில் 250 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

    மேலும் படிக்க: ஒரு சாலையில் இரு நடவடிக்கை... புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் தமிழக போலீசார் கட்டுப்பாடு..புதுச்சேரி சார்பில் கட்டுப்பாடு இல்லை

    Published by:Murugesh M
    First published:

    Tags: Corona, Pudukkottai

    அடுத்த செய்தி