Home /News /tamil-nadu /

அனுமதியின்றி மசூதி கட்டியதாக சர்ச்சை.. ஹெச்.ராஜா உள்ளிட்ட பாஜகவினர் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு

அனுமதியின்றி மசூதி கட்டியதாக சர்ச்சை.. ஹெச்.ராஜா உள்ளிட்ட பாஜகவினர் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு

ஹெச்.ராஜா

ஹெச்.ராஜா

சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான மெய்யநாதன் முஸ்லீம்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், இதே நிலை நீடித்தால் திமுகவிற்கோ அமைச்சர் மெய்யநாதனுக்கு வாக்கு செலுத்தக் கூடாது என்று தீர்மானிக்கப்படும் என்று ஹெச்.ராஜா தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காட்டில் வீடு கட்டுவதாக அனுமதி பெற்ற இடத்தில் மசூதி கட்டியுள்ளதாகவும் அதனை அகற்றக்கோரி பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றவில்லை எனக்கூறி பேரணியாக சென்று மசூதியை முற்றுகையிட சென்ற பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜாவால் பரபரப்பு ஏற்பட்டது. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சாலையின் குறுக்கே போலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஹெச். ராஜா சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் முஸ்லீம்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றச்சாட்டினார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள  மேற்பனைக்காட்டைச் சேர்ந்தவர் முகமது அலி,
வீடு கட்டுவதற்குஅனுமதி பெற்ற இடத்தில் மசூதி தோற்றமுடைய கட்டிடத்தை கட்டியுள்ளதாகவும் அதனை அகற்ற வேண்டும் எனக் கூறி மனு அளிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து அந்த கட்டிடத்தை அகற்றுமாறு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

நீதிமன்ற தீர்ப்பு அறிவித்து நான்கு மாதங்கள் ஆகிய நிலையில் இன்னும் அந்த கட்டிடத்தை அகற்றவில்லை எனவும், உடனடியாக அந்த கட்டிடத்தை அகற்றக்கோரி பாஜகவின் மூத்த தலைவர் ஹெச். ராஜா தலைமையில் பாஜகவினர் மேற்பனைக்காடு மழைமாரியம்மன் கோவிலில் இருந்து ஒன்றரை கிலோமீட்டர் தூரம் பேரணியாக சென்று மசூதியை முற்றுகையிட முயன்றனர்.

அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.  ஆனால் போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு உடன்பட மறுத்த அவர்கள் இரண்டுமணி நேரத்திற்கு மேலாக சாலையிலேயே நின்றவாறு ஆலங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் வடிவேல் உள்ளிட்ட அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: சுட்டெரிக்கும் வெயிலுக்கு ஜோராக விற்பனையாகும் மண்பாண்ட பிரிட்ஜ்... பழைய முறைப்படி இயற்கைக்கு திரும்பும் மக்கள்


மேலும், வருவாய்துறையினர் வரும்வரை சாலையை விட்டு நகர மாட்டேன்  என ஹெச்.ராஜா கூறினார். இதையடுத்து, தாமதமாக சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி மன்றத் தலைவர் வரும் 12ம் தேதிக்குள் அந்த கட்டிடத்தை முகமது அலி அகற்றாவிட்டால் 13 தேதி அரசே அந்த கட்டிடத்தை அகற்றும் என எழுத்துப்பூர்வமாக அளித்த உறுதியையடுத்து ஹெச்.ராஜா கிளம்பிச் சென்றார்.



இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா,மசூதி கட்டிடத்தை அகற்ற ஊராட்சி மன்ற தலைவர் உத்திரவாதம் அளித்துள்ளதாகவும், அதன்படி அகற்றப்படாவிட்டால் இந்துக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் எனவும், ஆலங்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரூம் சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான மெய்யநாதன் முஸ்லீம்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், இதே நிலை நீடித்தால் திமுகவிற்கோ அமைச்சர் மெய்யநாதனுக்கு வாக்கு செலுத்தக் கூடாது என்று தீர்மானிக்கப்படும் என்றார்.

மேலும், புதுக்கோட்டை மாவட்ட பாஜக அலுவலகம் அனுமதி இன்றி கட்டப்பட்டுள்ளதாக புதுக்கோட்டை நகராட்சி சார்பில் கொடுக்கப்பட்டுள்ள நோட்டீஸ் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, அனுமதி பெறப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.

செய்தியாளர்: ராஜசேகர் - அறந்தாங்கி
Published by:Murugesh M
First published:

Tags: BJP, H.raja bjp, HRaja

அடுத்த செய்தி