ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

செலவுக்கு பணம் தராத தாயை எரித்துகொன்ற மகன்: 40 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதிப்பு

செலவுக்கு பணம் தராத தாயை எரித்துகொன்ற மகன்: 40 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதிப்பு

ஆயுள் தண்டனை

ஆயுள் தண்டனை

செலவுக்கு பணம் தராததால் ஆத்திரமடைந்த சந்தோஷ் தாய் என்று கூட பாராமல் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து கொளுத்தி உள்ளார். 90 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்ட லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

புதுக்கோட்டை அருகே செலவுக்கு பணம் தராததால் தாயை மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து எரித்து கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும்  விதித்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த ஆயுள் தண்டனையில் 40 ஆண்டுகாலம் எந்தவித சலுகையையும் அரசு வழங்காமல் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள மருதாந்தலை பகுதியைச் சேர்ந்த துரைசாமி என்பவரது மகன் சந்தோஷ் (26). கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது தாய் லீலாவதியிடம்(55) செலவுக்கு பணம் கேட்ட நிலையில் அவர் பணத்தைக் கொடுக்க மறுத்துள்ளனர்.

’ உயிரோடு இருப்பதற்கு பதிலாக செத்துவிடலாம்’ என்றும் சந்தோஷை லீலாவதி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் தாய் என்று கூட பாராமல் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து கொளுத்தி உள்ளார். 90 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்ட லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  லீலாவதி அளித்த மரண வாக்குமூலத்தில் நடந்தவற்றை கூறியதையடுத்து சந்தோசை போலீசார் கைது செய்தனர்.

குற்றவாளி சந்தோஷ்

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில்  இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது.  வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய  புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிபதி அப்துல் காதர், சந்தோஷுக்கு ஆயுள் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் இந்த ஆயுள் தண்டனையில் எந்தவித சலுகையும் அரசு வழங்காமல் 40 ஆண்டுகாலம் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் மேலும் தான் செய்த தவறை உணர்ந்து திருந்த மூன்று மாத காலம் தனிமை சிறையில் வைக்கவும் உத்தரவிட்டார்.

இதையும் படிக்க: மாந்தோப்பை குத்தகைக்கு எடுத்து குட்கா பதுக்கல்.. 30 லட்சம் மதிப்பிலான குட்கா சிக்கியது

இதனையடுத்து குற்றவாளி சந்தோஷ் போலீசாரின் பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும் இந்த வழக்கில் குற்ற சம்பவம் நடந்து ஏழு மாதகாலத்தில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Pudhukottai, Pudukkottai