புதுக்கோட்டையைச் சேர்ந்த
ரஜினிகாந்த் ரசிகர் ஒருவர் ரஜினியின் அரசியல் வருகைக்காக காத்திருந்து இதுவரை வாக்களிக்காத நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் தனது முதல் வாக்கினை செலுத்தினார்.
புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தை சேர்ந்தவர் நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான மகேந்திரன் (48). பள்ளி படிக்கும் காலத்தில் இருந்தே ரஜினியின் தீவிர ரசிகராக மாறிய மகேந்திரன், ரஜினி அரசியலுக்கு வந்தால்தான் தனது முதல் வாக்கை செலுத்துவது என விடாப்பிடியாக இருந்து வந்துள்ளார். தனது மனைவி தேர்தலில் போட்டியிட்டப்போது கூட மகேந்திரன் வாக்கை செலுத்தவில்லை.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வரப்போவதாக கடந்த 2016ம் ஆண்டில் அறிவித்தார். இதனால் மகேந்திரன் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றார். நடிகர் ரஜினியின் கட்சிக்கு தனது முதல் வாக்கை செலுத்த அவர் காத்திருந்தார். இந்நிலையில், தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என ரஜினி அறிவித்தது மகேந்திரனுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
இதையும் படிங்க: உள்ளாட்சி தேர்தலுக்கு அரை நிர்வாணமாக வாக்களிக்க வந்த நபரால் பரபரப்பு
தற்போதைய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தான் எதிர்பார்த்த ஆட்சியை அளிப்பதாக கூறி தன்னை திமுகவில் மகேந்திரன் இணைத்துக்கொண்டார். 30 ஆண்டுகளாக வாக்கு செலுத்தாமல் இருந்த மகேந்திரன் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 22வது வார்டு ராஜகோபாலபுரம் நகராட்சி உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வரிசையில் நின்று தனது முதல் வாக்கை பதிவு செய்தார்.
செய்தியாளர்: ரியாஸ்- புதுக்கோட்டை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.