Home /News /tamil-nadu /

புதுக்கோட்டை சிறுவனின் மூளையில் பாய்ந்த குண்டு - துப்பாக்கி சுடும் மையம் தற்காலிகமாக மூடல்

புதுக்கோட்டை சிறுவனின் மூளையில் பாய்ந்த குண்டு - துப்பாக்கி சுடும் மையம் தற்காலிகமாக மூடல்

புதுக்கோட்டை சிறுவன்

புதுக்கோட்டை சிறுவன்

சிறுவன் பாதிக்கப்பட்ட தகவல் அறிந்த நார்த்தாமலை மக்கள், துப்பாக்கிச் சுடும் தளத்தை உடனடியாக மூட வேண்டும் என பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் காவல்துறையின் துப்பாக்கிச் சுடும் பயிற்சித் தளத்தில் பயிற்சியின் போது, 11 வயது சிறுவனின் பின்னந்தலையில் குண்டு பாய்ந்தது. சிறுவனின் தலையில் பாய்ந்த குண்டு அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

    புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே பசுமலைப்பட்டியில் தமிழ்நாடு காவல்துறைக்கு சொந்தமான துப்பாக்கி சுடும் பயிற்சித் தளம் உள்ளது. 60 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தளத்தில், தற்போது மத்திய தொழிற்பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சுடும் பயிற்சி பெற்று வருகின்றனர். வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில், துப்பாக்கிச் சுடும் பயிற்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது பயிற்சி பெற்றவர்கள் துப்பாக்கியைத் தவறாக இயக்கியதில் 2 குண்டுகள் திசைமாறிச் சென்றன.

    Also Read:  தொல்லை கொடுத்த முன்னாள் காதலன்.. தீர்த்துக்கட்டிய காதலி - நடந்தது என்ன?

    துப்பாக்கி சுடும் பயிற்சித் தளம் அருகே உள்ள நார்த்தாமலை குடியிருப்பில் உள்ள ஒரு குடிசை வீட்டின் மீது பாய்ந்து உள்ளே உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த 11 வயது சிறுவன் புகழேந்தியின் இடதுபக்க பின்னந்தலையில் பாய்ந்தது. சட்டென்று பேச்சு மூச்சின்றி சிறுவன் தரையில் விழுந்ததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக அவரை புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனையில், சிறுவனின்  மூளையில் குண்டு பாய்ந்தது தெரியவந்தது

    இதையடுத்து தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு குண்டு அகற்றப்பட்டது முதற்கட்ட விசாரணையில், 6ம் வகுப்பு படித்து வரும் சிறுவனுக்கு கொத்தமங்கலப்பட்டி சொந்த ஊர் என்பது தெரியவந்தது.விடுமுறைக்காக தாத்தா வீட்டிற்கு சென்ற சிறுவனுக்கு இந்தக் கொடூர சம்பவம் நடந்ததும் தெரியவந்தது.

    Also Read: காதலனுடன் இளம்பெண் உல்லாசம்.. வீடியோ எடுத்து மிரட்டிய சித்தப்பா - சித்தியால் வெளிச்சத்துக்கு வந்த கொடூரம்

    சிறுவன் பாதிக்கப்பட்ட தகவல் அறிந்த நார்த்தாமலை மக்கள், துப்பாக்கிச் சுடும் தளத்தை உடனடியாக மூட வேண்டும் என புதுக்கோட்டை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, துப்பாக்கிச் சுடும் தளத்தை தற்காலிகமாக மூட உத்தரவிட்டார்

    மத்திய தொழிற்பாதுகாப்புப் படையினர் மீது கவனக் குறைவாக ஆயுதங்களைக் கையாண்டது, மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் அலட்சியமாக செயல்பட்டது ஆகிய இரு பிரிவுகளின் கீழ் கீரனுார் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தனது மகனை எப்படியாவது காப்பாற்றித் தரும்படி சிறுவனின் தாய் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்தார். இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள நிலையிலும், தவறாகத் துப்பாக்கியை இயக்கியது ஒருவரா, இருவரா? அவர் யார்? என்பது குறித்த விவரங்களைப் போலீசார் வெளியிடவில்லை

     
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள், Pudhukottai

    அடுத்த செய்தி