Home /News /tamil-nadu /

ரூ.15 கோடிக்கு மேல் சொத்து மதிப்பு.. வருமானத்தை விட 100% அதிக சொத்து: அரசு ஊழியர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

ரூ.15 கோடிக்கு மேல் சொத்து மதிப்பு.. வருமானத்தை விட 100% அதிக சொத்து: அரசு ஊழியர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

ஊழல் குற்றச்சாட்டு

ஊழல் குற்றச்சாட்டு

முருகானந்தத்தின் சொத்து மதிப்பு ₹ 15 கோடிக்கு மேல்  உள்ளது என்றும் முருகானந்தம் தனது வருமானத்தை விட 100 மடங்கு சொத்து சேர்த்துள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலக உதவியாளர் 15 கோடி ரூபாய்க்கு மேலாக சொத்து சேர்த்துள்ளதாகவும் வருமானத்தை விட 100 மடங்கிற்கு மேல் சொத்துக் குவித்துள்ளதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 6 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கடுக்காகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம். மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார்.  இவரது சகோதரர் ரவிச்சந்திரன் புதுக்கோட்டை மாவட்டம்  திருவரங்குளம் ஒன்றிய அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக உள்ளார். மற்றொரு சகோதரர் பழனிவேலு அரசு ஒப்பந்ததாரர்.முருகானந்தம் மனைவி காந்திமதி புதுக்கோட்டை மாவட்டம் முள்ளங்குறிச்சி கிராம ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார்.

இந்நிலையில், புதுக்கோட்டை சார்லஸ் நகரில் உள்ள முருகானந்தம் வீடு, அவரது சகோதரர்கள் பழனிவேல், ரவிச்சந்திரன் ஆகியோரின் வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட 6 இடங்களில்  ஊழல் தடுப்பு & கண்காணிப்புத்துறை  போலீசார் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி இமயவரம்பன் தலைமையில் திருச்சி டிஎஸ்பி மணிகண்டன் மற்றும் சிவகங்கை, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த   லஞ்ச ஒழிப்புத்துறையின் 6 குழுக்கள்  முருகானந்தத்தின் வீடு மற்றும் அவரது சகோதரர்களின் வீடு உள்ளிட்ட இடங்களில் அதிரடியாக  சோதனையில் ஈடுபட்டனர்.  முருகானந்தத்தின் சகோதரர் ரவிச்சந்திரன் வீட்டில் நடைபெற்று வந்த லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனை நிறைவடைந்த நிலையில்,  மற்ற 5 இடங்களில் சோதனை தொடர்ந்து வருகிறது.



முதல்கட்டமாக,  அரசு ஊழியரான முருகானந்தம்,  அவரது மனைவி காந்திமதி இருவர் மீதும்  வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்  வழக்குப்பதிவுப் பதிவு செய்துள்ளனர். குறிப்பாக, முருகானந்தத்தின் சொத்து மதிப்பு ₹ 15 கோடிக்கு மேல்  உள்ளது என்றும் முருகானந்தம் தனது வருமானத்தை விட 100 மடங்கு சொத்து சேர்த்துள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சருக்கு 5 ஆண்டுகள் சிறை!


மேலும், முருகானந்தம் &  சகோதரர்கள் முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு நெருக்கமானவர்கள் என்று கூறப்படுகிறது. இதனால்,  கடந்த அதிமுக ஆட்சியில் முருனாந்தத்தின் சகோதரர் பழனிவேல் முக்கிய அரசு ஒப்பந்தக்காரராக இருந்துள்ளார். பல அரசுப் பணிகளை டெண்டர் எடுத்து செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
Published by:Murugesh M
First published:

Tags: Corruption, Pudhukottai

அடுத்த செய்தி