Home /News /tamil-nadu /

தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்ய ஹெலிகாப்டரில் வந்திறங்கிய மகன்.. புதுக்கோட்டை மக்கள் வியப்பு

தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்ய ஹெலிகாப்டரில் வந்திறங்கிய மகன்.. புதுக்கோட்டை மக்கள் வியப்பு

ஹெலிகாப்டர்

ஹெலிகாப்டர்

தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்வதற்காக மகன் ஒருவர்  பெங்களூரிலிருந்து 5 லட்சம் ரூபாய் வாடகையில் தனி ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டைக்கு பறந்து வந்த நிகழ்வு  பொதுமக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது.

    புதுக்கோட்டை அருகே உள்ள தென்னங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பையா. முன்னாள் ஊராட்சித் தலைவரான இவரது மகன் சசிகுமார் திருப்பூரில் தனியார் கம்பெனி வைத்து தொழில் செய்து வருகிறார்.இந்நிலையில் தனது கம்பெனி வேலை தொடர்பாக சவுதி அரேபியாவுக்கு சென்றிருந்த சசிகுமாருக்கு தந்தை சுப்பையா  இறந்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

    இதையடுத்து சவுதி அரேபியாவிலிருந்து விமானம் மூலம் பெங்களூர் வந்த அவர் அங்கிருந்து சுமார் ரூ.5 லட்சம்  வாடகை கொடுத்து தனி ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்திற்கு வந்து இறங்கினார். பின்னர், அங்கிருந்து தென்னங்குடிக்கு காரில் சென்று தந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

    Also Read: கொடைக்கானலை அச்சுறுத்தும் மேஜிக் மஷ்ரூம்.. சுற்றுலா பயணிகளை குறிவைக்கும் போதை கும்பல்

    இந்நிலையில் மாலை புதுக்கோட்டையிலிருந்து பெங்களூர்  திரும்புவதற்கு ஹெலிகாப்டர் தயாரான நிலையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதையடுத்து பயணம் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து பகலில் அந்த ஹெலிகாப்டர் புறப்படும் என கூறப்படுகிறது.

    புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் திடீரென ஹெலிகாப்டர் வந்து இறங்கியதால் அதனை அப்பகுதியை சேர்ந்த மக்கள் ஆச்சரியத்துடன் வந்து பார்த்து சென்றனர்.மேலும் தந்தைக்கு இறுதி காரியங்கள் செய்வதற்காக மகன் ஹெலிகாப்டரில் வந்த நிகழ்வும் மக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர்: ரியாஸ் ( புதுக்கோட்டை)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Death, Father, Funeral, Helicopter, Pudhukottai, Tamil News

    அடுத்த செய்தி