Home /News /tamil-nadu /

புதுக்கோட்டையில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் : அலைக்கழிக்கப்பட்டதால் சாலைமறியல் போராட்டம்

புதுக்கோட்டையில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் : அலைக்கழிக்கப்பட்டதால் சாலைமறியல் போராட்டம்

சாலைமறியல் போராட்டம்

சாலைமறியல் போராட்டம்

Pudukkottai District : புதுக்கோட்டையில் கால்நடை பண்ணையில், கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணலுக்கு அழைப்பு கடிதம் வந்த நிலையில், நேர்காணல் ஒத்திவைக்கப்படுவதாக திடீரென அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டதால் நேர்காணலில் கலந்துகொள்ள வந்தவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்கவும் ...
    புதுக்கோட்டை மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு, மொத்தமுள்ள 79 காலிப்பணியிடங்களுக்கு 6,690 பேர் விண்ணப்பம் அளித்திருந்தனர்.‌ விண்ணப்பம் அளித்த நபர்களுக்கு ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக எந்தெந்த தேதியில் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும் என்ற அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது.

    இந்நிலையில் புதுக்கோட்டை அண்டக்குளம் சாலையில் உள்ள கால்நடை பண்ணையில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் நேர்காணல் அழைப்பு கடிதம் வந்தவர்களுக்கு கடந்த 20ம் தேதி முதல் நடைபெற்று வந்த நிலையில் நேற்று மாலை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு நிர்வாக காரணங்களால் தற்காலிகமாக நேர்காணல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தார்.

    அதனைத் தொடர்ந்து வழக்கம் போல் இன்று நேர்காணலுக்கு அழைப்பு வந்த நூற்றுக்கும் மேற்பட்டோர், கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு நேர்காணலில் கலந்து கொள்ள வந்த நிலையில் இன்றிலிருந்து 30ம் தேதி வரை நடைபெற கூடிய நேர்காணல் ஒத்திவைக்கப்படுவதாக, நேர்காணல் நடைபெறும் கால்நடை பண்ணையில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. நேர்காணலுக்கு வந்தவர்கள் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதனைத் தொடர்ந்து அண்டக்குளம் விளக்கு பிரிவு சாலை மச்சுவாடி அருகே சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியல் போராட்டத்தை கைவிட வைத்தனர். பின்னர் சாலை ஓரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் குவிந்து எதனால் நேர்காணல் ஒத்தி வைக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை பராமரிப்பு துறை துணை இயக்குனர் அரசு, நேர்காணலுக்கு வந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நேர்காணல் நிர்வாக காரணத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் நேர்காணலில் கலந்து கொள்ளாதவர்களுக்கு விரைவில் அழைப்புக் கடிதம் வரும் என்றும் கூறினார்.

    சாலைமறியல் போராட்டம்


    இது குறித்து நேர்காணலில் கலந்துகொள்ள வந்தார்கள் கூறுகையில், ஏற்கனவே 8 தினங்கள் நேர்காணல் நடைபெற்றுள்ளது. மீதமுள்ள 3 நாட்கள் நேர்காணல் நடத்தாமல் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த நேர்காணல் எதனால் நிறுத்தப் பட்டுள்ளது என்பது முறையாக தெரிவிக்கவில்லை.

    Must Read : பிறந்த வீட்டு பெண்களை, புகுந்த வீட்டு பெண்கள் வரவேற்கும் விநோத திருவிழா! - சிறப்புக்குரிய சிவகங்கை தவசியேந்தல்பட்டி கிராமம்..

    ஏற்கனவே 8 நாட்கள் நேர்காணலில் கலந்து கொண்டவர்களுக்கு வேலை வழங்கப்படுமா, அல்லது எங்களுக்கும் நேர்காணல் முடிந்த பிறகு மொத்தமாக வேலை வழங்கப்படுமா என்பதை தெரியப்படுத்த வேண்டும். எங்களுக்கு மீண்டும் எப்போது நேர்காணலுக்கான அழைப்பு வரும் என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

    இந்த கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணி அதிமுக ஆட்சி காலத்தில் இரண்டு முறை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது மூன்றாவது முறையாக நேர்காணல் முடிய மூன்று நாட்களே இருந்த நிலையில், மீண்டும் இந்த பணிக்கான நேர்காணல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால், பணிக்கு விண்ணப்பித்து நேர்காணலில் கலந்து கொண்டவர்களுக்கும் கலந்து கொள்வதற்காக காத்திருந்தவர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர் - ர.ரியாஸ், புதுக்கோட்டை.
    Published by:Suresh V
    First published:

    Tags: Interview, Protest, Pudukkottai

    அடுத்த செய்தி