கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மொய் விருந்து நடத்திய புதுக்கோட்டை டீக்கடைக்காரர்...
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மொய் விருந்து நடத்திய புதுக்கோட்டை டீக்கடைக்காரர்...
மொய் விருந்து நடக்கும் டீக்க்கடை
புதுக்கோட்டை அருகே, டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக டீ கொடுத்து மொய் விருந்து நடத்தி வரும் டீக்கடைக்காரர் அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வம்பன் நால் ரோடு பகுதியில் உள்ள பகவான் டீ ஸ்டாலை நடத்தி வருகிறார் சிவக்குமார். சமூக செயற்பாட்டாளரான சிவகுமார் கடந்த கஜா புயலின் போது பாதிக்கப்பட்ட பொதுமக்களின் ரூபாய் 15000 வரையிலான டீக்கடை கடன்களை தள்ளுபடி செய்து பல்வேறு தரப்பினரிடம் பாராட்டுகளைப் பெற்றார்.
இதைத்தொடர்ந்து டெல்லியில் கொரோனாவின் இரண்டாவது அலையின் தீவிரத்தை கண்டு மனதுடைந்த சிவக்குமார், டெல்லி மக்களுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்ய எண்ணினார். அதனால் தனது டீக்கடையில் வந்து டீ அருந்தபவர்களிடம் டீயை கொடுத்து டீ கான தொகையை தன்னிடம் வழங்க வேண்டாம் என்று கூறிய சிவக்குமார் அந்தத் தொகையை கடை வாசலில் வைக்கப்பட்டிருக்கும் மொய் பாத்திரத்தில் டெல்லி கொரோனா நோயாளிகளுக்கான நிதியாக அளிக்குமாறு தனது வாடிக்கையாளர்களிடம் கோரிக்கை விடுத்தார்.
டீக்கடைக்காரரின் இந்த செயலால் பூரிப்படைந்து பொதுமக்கள் டீக்கான தொகை 6 ரூபாய் என்றாலும் உதவும் எண்ணம் கொண்ட மக்கள் டீ குடித்து விட்டு 1000 ரூபாய் வரை மொய் செய்து வருவதாகக் கூறுகிறார் சிவக்குமார்.
இதுவரை 4000 ரூபாய் வரை மொய் நிதி வந்துள்ளதாகவும் இன்று மாலைக்குள் 10000 ரூபாய் வரை மொய் தொகை வரலாமா என்று யூகிக்கபடுகின்றது என்றும் கூறுகிறார். தனது டீ கடை மூலம் வரும் மொய் தொகையை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரியிடம் ஒப்படைத்து அவர் மூலமாக நிதி டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படுவதாக கூறுகின்றார்.
மொய் விருந்துக்குகான பத்திரிகை
அன்றாடம் தனது குடும்பத்தை நடத்துவதற்கே மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வரும் டீக்கடைக்காரர் ஒருவர் டீ மொய் விருந்து வைத்து அந்த தொகையை கொரோனா நிதியாக கொடுப்பது அப்பகுதி மக்களிடையே வியப்பையும் மகிழ்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்: அரவிந்தன், புதுக்கோட்டை
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.