வங்கியில் அடகுவைத்த ரூ.1 கோடி மதிப்பிலான நகைகளைத் திருடிய வங்கி மேலாளர்: 4 பேர் கைது: விசாரணையில் திடுக் தகவல்

வங்கியில் அடகுவைத்த ரூ.1 கோடி மதிப்பிலான நகைகளைத் திருடிய வங்கி மேலாளர்: 4 பேர் கைது: விசாரணையில் திடுக் தகவல்

நகை திருட்டு

புதுக்கோட்டையில் வங்கியில் அடகு வைக்கப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான நகைகளை திருடி தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்ததாக வங்கி மேலாளர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

  • Share this:
    புதுக்கோட்டையில் வங்கியில் அடகு வைக்கப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான நகைகளை திருடி தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்ததாக வங்கி மேலாளர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

    புதுக்கோட்டை தெற்கு 4ம் வீதியில் ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. நகை கடன், தனிநபர் கடன் உள்ளிட்ட பல்வேறு நிதி சேவைகளை இந்த வங்கி கிளை வழங்கிவருகிறது.

    கடந்த வாரம் இந்த வங்கியில் அதிகாரிகள் தணிக்கை மேற்கொண்டனர். அப்போது ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 306 பவுன் நகைகள் காணாமல் போனது தணிக்கையில் தெரியவந்ததை அறிந்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக, வங்கி மேலாளர் உமாசங்கரிடம் விசாரித்தபோது அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகின.

    வங்கி மேலாளர் உமாசங்கர், நகை மதிப்பீட்டாளர் சோலை மணி மற்றும் கடன் மேலாளர் முத்துக்குமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து நகைகளை திருட திட்டமிட்டுள்ளனர். அதன்படி கடந்த ஆண்டு தணிக்கை முடிந்த பின், உடனடியாக அடகு வைக்கப்பட்ட நகைகளை கொஞ்சம் கொஞ்சமாகத் திருடியுள்ளனர்.

    அவற்றை, புதுக்கோட்டையில் இயங்கி வரும் மற்றொரு நிதி நிறுவனத்தில் அடகு வைத்துள்ளனர். அதன் மேலாளர் மாரிமுத்து இந்தக் குற்றச் செயலுக்கு உடந்தையாக இருந்துள்ளார்.

    இந்த சம்பவம் தொடர்பாக, வங்கி மேலாளர் உமாசங்கர் உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். நிதி நிறுவனத்தில் அடகு வைக்கப்பட்ட 306 பவுன் தங்க நகைகளும் மீட்கப்பட்டன.

    கைதானவர்களிடம்  போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நகைகளை அடகு வைத்து பெற்ற பணத்தில் பல இடங்களில் சொத்துக்கள் வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது. எங்கெங்கு சொத்துக்கள் வாங்கியுள்ளனர்? இவர்களின் பின்னணியில் வேறு யாரும் உள்ளனரா? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Murugesh M
    First published: