புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி பெண்ணிடம் ஆன்லைனில் பேசி ரூ.2.8 லட்சம் மோசடி செய்த 2 பேரை சைபர் கிரைம் போலீசார் 20 நாட்களுக்குள் கைது செய்து சிறையில் அடைத்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றுள்ள நிலையில் வெளிநாட்டில் இருக்கும் முக்கிய குற்றவாளி கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியை சேர்ந்த 28 வயதுடைய, பொறியியல் படித்த பெண்ணிடம், ஆன்லைன் வழியாக அறிமுகம் இல்லாத ஒருவர் "வீட்டு உபயோக பொருட்களை வாங்கி, வீட்டில் இருந்தே விற்பனை செய்து, அதிக வருமானத்தை ஈட்டலாம்" என்பது போன்று மூளை சலவை செய்யும்படியாக அடிக்கடி பேசியுள்ளார்.
அதன்படி, அப்பெண்ணிடம் இருந்து ரூ.2.80 லட்சத்தை பல்வேறு தவணைகளாக பெற்றுக்கொண்டு ஏமாற்றியுள்ளார். இது குறித்து புதுக்கோட்டை சைபர் கிரைம் பிரிவில் கடந்த மாதம் 25 ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. காவல் ஆய்வாளர் கவிதா தலைமையிலான போலீஸார் இது குறித்து சம்பந்தப்பட்ட பெண்ணிற்கு வந்த செல்போன் எண்களை கொண்டு தீவிர விசாரணையில் ஈடுபட்டார்.
இந்நிலையில், அப்பெண்ணிடம் மோசடி செய்த விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மடத்துப்பட்டியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் காளிமுத்து(28), ராஜகோபாலன் மகன் மன்னவன்(26) ஆகிய 2 பேரையும் போலீஸார் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்களிடம் இருந்து 2 செல்போன்கள், 1 கணினியையும் பறிமுதல் செய்தனர். மேலும், இம்மோசடி வழக்கில் தொடர்புடைய, முதல் குற்றவாளியான துபாயில் தங்கி இருக்கும் சோமசுந்தரம் என்பவரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
ALSO READ | ஆளுநருக்கு டீ செலவு மிச்சம் - திமுக புறக்கணிப்புக்கு அண்ணாமலை கிண்டல்
செய்தியாளர் : ரியாஸ் , புதுக்கோட்டை
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Online crime, Puthukkottai