Home /News /tamil-nadu /

கல்குவாரி பெயரில் கனிமவளங்கள் கொள்ளை... புதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கல்குவாரி பெயரில் கனிமவளங்கள் கொள்ளை... புதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Naam Tamilar Katchi Protest | புதுக்கோட்டையில் கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக கூறி நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்குவாரி என்ற பெயரில் கனிம வளக் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து புதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அன்னவாசல், பெருமாநாடு> முத்துடையான்பட்டி, லேணாவிளக்கு, திருமயம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றது. இந்த கல்குவாரிகளில் அளவுக்கு அதிகமான ஆழத்தில் கற்களை வெட்டி எடுத்து நிலத்தடி நீர் மட்டத்தை அடியோடு வரண்டு போக வைக்கும் கல் குவாரிகளை இழுத்து மூட வேண்டும், பொதுமக்களுக்கு இடையூறாக ஊரின் மையப்பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் இயங்கும் கல் குவாரிகளை மூட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியினர் வலியுற்தி வருகின்றனர்.

மேலும்  புதுக்கோட்டை மாவட்டத்தில் முறையான அனுமதி பெறாமல் திருட்டுத்தனமாக இயங்கும் கல்குவாரிகள் அனைத்தையும் உடனடியாக இழுத்து மூட வேண்டும், பெரும்பாலான கல்குவாரிகள் நெடுஞ்சாலையின் அருகே இயங்கி மண் புகையை வெளியேற்றி சாலையில் விபத்தைத் ஏற்படுத்துவதாகவும், புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் எண்ணிலடங்கா கல்குவாரிகள் இருப்பது ஏன் இயற்கை வளத்தை இத் தலைமுறையோடு அளிப்பதற்காக செயல்படுகிறதா என்றும் கல் குவாரிகளில் மாசு கலந்த புகையினை வெளியேற்றி காற்று மாசுபாட்டினால் பொதுமக்களுக்கு சுவாசப் பிரச்சினைகள் உயிரிழப்புகள் ஏற்படுத்தி வருவதாகவும் குற்றம்சாட்டி உள்ளனர்.

Also Read : வைகோ மகனுக்கு முக்கியத்துவம், திமுகவுடன் இணைக்க வேண்டும்: மதிமுகவில் வெடித்த உட்கட்சி பூசல்

கல் குவாரிகளில் வெட்டி எடுக்கப்படும் கற்களை அதிக அளவு பாரத்துடன் நெடுஞ்சாலையில் அதி வேகத்தில் இயக்கி விபத்தை கல்குவாரிகள் ஏற்படுத்தி வருகின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்குவாரி என்கின்ற பெயரில் கனிம வளக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டிப்பதாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர்  முழக்கங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்தியாளர் : ரியாஸ், புதுக்கோட்டை
Published by:Vijay R
First published:

Tags: Naam Tamilar katchi, Pudukkottai

அடுத்த செய்தி