Home /News /tamil-nadu /

ஜூஸ்.. தேநீர் போட்டு ‘ஓட்டு’ கேட்கும் திமுக எம்.எல்.ஏ - நூதன பிரச்சாரம்

ஜூஸ்.. தேநீர் போட்டு ‘ஓட்டு’ கேட்கும் திமுக எம்.எல்.ஏ - நூதன பிரச்சாரம்

திமுகவினர் வாக்கு சேகரிப்பு

திமுகவினர் வாக்கு சேகரிப்பு

திமுக சார்பில் போட்டியிடும்‌ ஹவ்வாகனி நைனாமுகமதுக்கு ஆதரவாக புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    புதுக்கோட்டை நகராட்சி 16வது வார்டு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா அனைத்து சமூகத்தினரும் சமம் என்பதை உணர்த்தும் வகையில் காலணி தைக்கும் தொழிலாளருடன் அமர்ந்தும் ஜூஸ் மற்றும் தேநீர் போட்டுக் கொடுத்தும் வெல்டிங் அடித்தும் வித்தியாசமான முறையில் தீவிர பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே எஞ்சியுள்ளதால் களத்தில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    இந்நிலையில் அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை நகராட்சி 16வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும்‌ ஹவ்வாகனி நைனாமுகமதுக்கு ஆதரவாக புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    Also Read: பொய் பேசுவதில் ஸ்டாலினுக்கு நோபல் பரிசு, உதயநிதிக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம் - எடப்பாடி பழனிசாமி

    அப்போது அந்த பகுதியில் அனைத்து சமூகத்தினரும் சமம் என்பதை உணர்த்தும் வகையில் காலனி தைக்கும் தொழிலாளியுடன் அமர்ந்து அவர் செய்யும் தொழிலை ஊக்குவித்து அவரிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். பின்னர் அந்த வார்டில் உள்ள ஜூஸ் கடையில் ஜூஸ் போட்டு கொடுத்தும் தேநீர் கடையில் தேநீர் போட்டு கொடுத்தும் நூதன முறையில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் வெல்டிங் பட்டறையில் வெல்டிங் அடித்தும் வித்தியாசமான முறையில் வாக்காளர்களை கவர பிரச்சாரம் மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

    செய்தியாளர்: ரியாஸ் (புதுக்கோட்டை)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: DMK, DMK Campaign, Election Campaign, Local Body Election 2022, Tamilnadu

    அடுத்த செய்தி