Home /News /tamil-nadu /

புதுக்கோட்டை : மயக்க மருந்து கொடுத்து சிறுமியை பலாத்காரம் செய்த நபருக்கு ஆயுள் தண்டனை

புதுக்கோட்டை : மயக்க மருந்து கொடுத்து சிறுமியை பலாத்காரம் செய்த நபருக்கு ஆயுள் தண்டனை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

புதுக்கோட்டையில் 11ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து  மகிளா நீதிமன்ற தீர்ப்பு வழங்கியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு பொன்னமராவதி தாலுகாவை சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை புதுக்கோட்டை மாவட்டம் கங்காணி பட்டி மரவாமதுரை பகுதியை சேர்ந்த சின்னபாண்டி என்பவரின் மகன் ராஜ்குமார்(34) என்பவர் சிறுமிக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு  குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் தொல்லை செய்துள்ளார். இதில் கருவுற்ற சிறுமி அதைப்பற்றி என்ன விவரம் என்று கூட தெரியாமல் உடலில் ஏற்பட்ட மாற்றத்தை வைத்து சிறுமியின் தாயிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து சிறுமி விசாரித்ததில் தனக்கு எதுவும் தெரியாது என கூறிய சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தும் போது அவர் கருவுற்று இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.  சிறுமியிடம் விசாரணை நடத்திய பெற்றோர்கள் ராஜ்குமார் செயலை சிறுமி கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 2020-ம் ஆண்டு கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புாகர் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர்.  இந்த வழக்கானது புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில்   இன்று தீர்ப்பு வழங்கிய  நீதிபதி சத்யா சம்பந்தபட்ட நபர் ஏற்கனவே 2 திருமணம் செய்தவர் என்றும் சிறுமியை மயக்க மருந்து கொடுத்து  பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் அந்த நபருக்கு போக்சோ சட்டத்தின்படி இயற்கை மரணம் அடையும் வரை ஆயுள் தண்டனை விதித்தும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
Published by:Vijay R
First published:

Tags: Crime | குற்றச் செய்திகள், Pudukkottai

அடுத்த செய்தி