கராத்தே சாகச நிகழ்ச்சியில் விபரீதம்.. தீப்பிடித்து இளைஞர் உயிரிழப்பு - புதுக்கோட்டையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

இளைஞர் பாலாஜி

கராத்தே சாகச நிகழ்ச்சியில் தீப்பிடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழப்பு

  • Share this:
    கராத்தே தகுதிப் பட்டை வழங்கும் நிகழ்ச்சியில் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    புதுக்கோட்டை அடப்பன்வயல் அருகே உள்ள திடலில் கடந்த 14ஆம் தேதி புத்தாஸ் வீர கலைக்கழகம் மற்றும் அமெச்சூர் டேக்வோண்டா சங்கம் இணைந்து நடத்திய தகுதிப் அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் கராத்தே வீரர்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கராத்தே வீரர்கள் சாகசங்களை நிகழ்த்தினர்.

    இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை வடக்கு ராஜவீதியை சேர்ந்த 19 வயதான இளைஞர் பாலாஜி என்பவர் கலந்துக்கொண்டார். பாலாஜி கையில் துணியைச் சுற்றி அதில் பெட்ரோலை ஊற்றி  நெருப்பை பற்ற வைத்து ஓடு உடைக்கும் சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்டிருந்தார். பாலாஜி கையில் நெருப்பை பற்றவைத்து சாகசம் செய்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நெருப்பானது பாலாஜியின் உடலில் பரவத் தொடங்கியது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    வலி தாங்கமுடியாமல் பாலாஜி  அந்தத்திடலில் கூச்சலிட்டவாறே ஓடினார். உடனே அங்கிருந்த சகவீரர்கள் ஓடி வந்து பாலாஜி மீது பரவியிருந்த நெருப்பை அணைத்தனர். அவரது உடலில் தீக்காயங்கள்  இருந்தது. இதனையடுத்து அவரை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.



     




    View this post on Instagram





     

    A post shared by News18 Tamil Nadu (@news18tamilnadu)






    மருத்துவமனையில் கடந்த 5 நாள்களாக 30 சதவிகித தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்தார்.  இந்நிலையில் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி பாலாஜி பரிதாபமாக உயிரிழந்தார்.  சாகச நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட இளைஞர் எதிர்பாராத விபத்தில் சிக்கி உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர்: அரவிந்த் (புதுக்கோட்டை)



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Ramprasath H
    First published: