புதுக்கோட்டை மாவட்டத்தில், சத்துணவு பணியாளர்களுக்கான சமையல் போட்டியில், சிறு தானியங்கள் மற்றும் பயறு வகைகளை பயன்படுத்தி பாரம்பரிய உணவுகளை தயாரித்து அசத்தினர்.
இந்த போட்டியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களிலிருந்தும், புதுக்கோட்டை நகராட்சியில் இருந்தும் 14 அரங்குகள் இடம் பெற்றிருந்தன.
இதில் கலந்துகொண்ட சத்துணவு பணியாளர்கள் சிறு தானியங்களின் ஊட்டச் சத்து குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாரம்பரிய முறைப்படி பல்வேறு வகையான உணவு வகைகளை சமைத்து வைத்திருந்தனர்.
கம்பு, கேழ்வரகு, கேப்பை, திணை, சாமை உள்ளிட்ட சிறு தானியங்கள் மற்றும் பயறு வகைகளால் செய்யப்பட்ருந்த உணவு வகைகள் அனைவரை ஈர்க்கும் விதமாக அமைந்திருந்தது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு சத்துணவு பணியாளர்கள் சமைத்த உணவுகளை உண்டு மகிழ்ந்தார்.
-செய்தியாளர்: ரியாஸ்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.