புதுக்கோட்டையில் இளம் பெண் கழுத்து அறுத்து கொலை... வீட்டில் இருந்த 30 பவுன் நகை கொள்ளை... காதலனை கைது செய்து விசாரிக்கும் போலீசார்...

கொலையான லோக பிரியாவின் வீடு

புதுக்கோட்டையில் இளம் பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டதுடன் வீட்டில் இருந்த 30 பவுன் நகையும் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இது காதல் பிரச்சனையா என்ற கோணத்தில் போலீசார் பெண்ணின் காதலன் மற்றும் உறவினர் சுரேஷ் என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

  • Share this:
    புதுக்கோட்டை பொன் நகரை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மனைவி சிவகாமி. இந்த தம்பதியின் மகள் லோகப்பிரியா. இவர் புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் பழனியப்பன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். சிவகாமி மின்வாரிய அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். வேலைக்கு சென்றுவிட்டு நேற்று மாலையில் சிவகாமி வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டில் பெட்ரூமில் ரத்த காயங்களுடன் லோகப்பிரியா பிணமாக கிடந்தார். இதனை பார்த்த அவர் கதறி துடித்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தியதில் லோகப்பிரியாவை கொலை செய்தவர்கள் வீட்டி இருந்த 30 பவுன் நகைகளை எடுத்துச் சென்றது தெரியவந்தது. மேலும் லோக பிரியாவை கொலை செய்த நபர் அடிக்கடி வீட்டுக்கு வந்த நபராக இருக்கலாம் எனவும், அவருக்கு தெரிந்த நபரே கொலை செய்திருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.

    அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் மோப்ப நாய் வரவேற்கப்பட்டு ஆய்வு செய்தனர்.  இதன் பிறகு போலீசார் நடத்திய விசாரணையில் லோகப்பிரியா  தமிழ்ச்செல்வன் என்பவரை காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது அவரது உறவினரான சுரேஷ் என்பவருக்கு பிடிக்கவில்லை. அவரும் லோக பிரியாவை விரும்பியதாக கூறப்படுகிறது. ஆனால் சுரேஷ் அந்த பெண்ணிற்கு அண்ணன் முறை வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் காதலன் தமிழ்ச்செல்வன் வருவது சுரேஷுக்கு பிடிக்கவில்லை சுரேஷ் வருவது தமிழ் செல்வனுக்கு பிடிக்கவில்லை. இதற்கிடையில்தான் லோக பிரியா கொலை செய்யப்பட்டு உள்ளார்.
    கொலை செய்தவர் வீட்டில்  உள்ள 30 பவுன் நகைகள் மற்றும் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இது குறித்து தகவல் தெரிந்ததும் போலீசார் வாகனத் தணிக்கையில்  ஈடுபட்டு சுரேஷை கைது செய்தனர். மேலும் லோக பிரியாவின் காதலன் தமிழ் செல்வனையும் சந்தேகத்தின்பேரில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் படிக்க... கடை நடத்துவதில் தகராறு.. இராசிபுரத்தில் போலீசார் குவிப்பு...

    மேலும் லோக பிரியாவின் தாயார் சிவகாமியையும் போலீசார் அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர். இதில் யார் கொலை செய்தார் என்பது குறித்து விசாரணைக்கு பின்னர் தான் தெரியவரும் என்று போலீசார் தெரிவிக்கின்ரனர்.

    செய்தியாளார் : அரவிந்தன், புதுக்கோட்டை



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: