தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்திற்கு அரசர்குளம் பகுதியில் உள்ள கரும்புகளை கொள்முதல் செய்ய சுற்றுச் சூழல்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் மெய்யநாதனிடம் கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியத்துக்குட்பட்ட அரசர்குளம் கீழ்பாதி சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 100 ஏக்கருக்கு மேல் செங்கரும்பு ஆண்டுதோறும் பொங்கல் விழாவிற்காக விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
அந்தப் பகுதியை சுற்றுச்சூழல்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, இந்தப் பகுதியில் விளைவிக்கப்படும் கரும்புகளை பொங்கல் பரிசுத்தொகுப்பிற்கு கொள்முதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சரிடம் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
அப்போது அமைச்சர், முதலமைச்சரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் உள்ள கரும்புகளையும் பொங்கல் இலவச பரிசுத் தொகுப்பு திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
Must Read : ஆடு திருட்டு கும்பலை துரத்திச் சென்ற எஸ்.ஐ. பூமிநாதன் கொலை : இரண்டு சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது
மேலும், அந்த பகுதியில் உள்ள சுமார் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்து சிதிலமடைந்துள்ள சுந்தர சொர்ணேஸ்வரர் திருக்கோயிலை நேரில் ஆய்வு செய்து, கோயிலை புதுப்பிக்க அறநிலையத்துறை அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று தேவையான அனைத்து பணிகளையும் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.
செய்தியாளர் - ராஜசேகரன் - அறந்தாங்கி.இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.