முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிக்கு இதய சிகிச்சை அளித்த எம்.எல்.ஏ.

அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிக்கு இதய சிகிச்சை அளித்த எம்.எல்.ஏ.

டாக்டர் முத்துராஜா எம்.எல்.ஏ.

டாக்டர் முத்துராஜா எம்.எல்.ஏ.

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளி நெஞ்சுவலியால் துடித்தபோது, ஆய்வுக்கு சென்ற திமுக எம்.எல்.ஏ. டாக்டர் முத்துராஜா அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார்.

  • Last Updated :

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை கொரோனா வார்டில் 600-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கே. புதுக்கோட்டை தொகுதி திமுக எம்.எல்.ஏ., டாக்டர் முத்துராஜா ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 50 வயது நபர் நெஞ்சுவலியால் துடித்தார்.

அப்போது அங்கு சென்ற முத்துராஜா, உடனடியாக முழு கவச உடை அணிந்து, சி.பி.ஆர்., எனப்படும், இதயம் இருக்கும் பகுதியை கைகளால் அழுத்தி முதலுதவி சிகிச்சை அளித்தார். அதனைத் தொடர்ந்து, அங்கிருந்த மருத்துவர்களிடம் அந்த நோயாளிக்கு மேல் சிகிச்சைகள் குறித்தும் அறிவுறுத்தினார்.

உரிய நேரத்தில் முதலுதவி செய்து, தயங்கமின்றி, கொரோனா நோயாளிக்கு இதய சிகிச்சை அளித்த எம்.எல்.ஏ., டாக்டர் முத்துராஜாவை பலரும் பாராட்டினர்.

Must Read : கொரோனா சிகிச்சை மையத்தில் அரசியல் கட்சியினர் தொந்தரவு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் கே.என்.நேரு எச்சரிக்கை

இந்நிலையில், முத்துராஜா கொரோனா வார்டில் சிகிச்சை பணிக்காக 12 செவிலியர்களை நியமித்து, அவர்களுக்கு தனது சொந்த செலவில் சம்பளம் வழங்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: CoronaVirus, MLA, Pudukkottai