புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பேட்மிட்டன் கிளப்பில் மதுரா பேட்மிட்டன் அகாடமி சார்பில் மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி நேற்று தொடங்கியது. இந்தப் போட்டியை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா தொடங்கி வைத்தார்.
இந்த போட்டியானது 10, 13, 15, 17, 19 என ஐந்து பிரிவுகளாக வயதின் அடிப்படையில் பிரிக்கப்பட்டு ஆண்கள் பெண்கள் என இருபாலருக்கும் ஒற்றையர் பிரிவு, இரட்டையர் பிரிவு என இரண்டு வகையான போட்டிகள் நடைபெற்று வருகிறது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போட்டியில் கலந்து கொண்டு ஆர்வத்துடன் விளையாடி வருகின்றனர். நேற்று தொடங்கியுள்ள இந்த போட்டி இன்று மாலை வரை நடைபெற உள்ளது. ஏராளமானோர் ஆர்வமுடன் போட்டியை கண்டு களித்து வருகின்றனர்.
Must Read : நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை குறிவைத்து கொள்ளை.. சேசிங் கொள்ளையர்கள் இருவர் கைது
இந்த போட்டியில் வெற்றி பெறும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், சட்டமன்ற உறுப்பினர் முத்து ராஜா ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகள் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்க உள்ளனர்.
செய்தியாளர் - ர.ரியாஸ், புதுக்கோட்டை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.