புதுக்கோட்டையில் ஊரடங்கு உத்தரவு நடைமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பது குறித்தும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு 5 கிமீ தூரம் சைக்கிளில் சென்று நகரின் முக்கிய வீதிகளில் ஆய்வு செய்ததோடு பொதுமக்களுக்கு முகக் கவசங்களை வழங்கி கொரோனா பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய நிகழ்வு காண்பவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்த நிலையில் போலீசாரும் தொடர்ந்து வாகன தணிக்கை மற்றும் தேவை இல்லாமல் பொது வெளிகளில் சென்று தெரியும் அவர்களை எச்சரித்து வீட்டுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை நகர் பகுதிகளில் காவல்துறையினர் மேற்கொண்டு வரும் வாகன தணிக்கையினையும் பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவை முறையாக பின்பற்றுகிறார்களா என்பதனையும் ஆய்வு செய்யவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் நகரின் முக்கிய வீதிகளில் உள்ள சாலைகளில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மிதிவண்டியில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம்,வடக்கு ராஜவீதி,மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை உள்ளிட்ட இடங்களில் காவல் துறையினர் அபராதம் விதிக்கும் பணியினைஆய்வு செய்த ஆட்சியர் கவிதா ராமு அபராத புத்தகத்தை வாங்கிப் பார்த்து எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார்.
Also Read : எங்க தலைக்கு தில்ல பார்த்தியா.. போலீஸ் ஸ்டேஷனில் சிறுவர்களின் இன்ஸ்டா ரீல்ஸ்.. அறிவுரை வழங்கிய ஆய்வாளர்
மேலும் புதிய பேருந்து நிலையம் வடக்கு ராஜவீதி உள்ளிட்ட சாலைகளில் முகக் கவசம் அணியாமல் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காமல் சுற்றித்திரிந்த பொதுமக்களுக்கு அறிவுரை கூறிய ஆட்சி கவிதா ராமு அவர்களுக்கு இலவச முகக்கவசம் வழங்கி கொரோனா வைரஸின் பாதிப்பு குறித்து எடுத்துக்கூறினர்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு 5 கிலோமீட்டர் தூரம் வரை சைக்கிளில் சென்று ஊரடங்கு உத்தரவை ஆய்வு செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய நிகழ்வு காண்பவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது.
செய்தியாளர் : ரியாஸ்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Pudukkottai