ஆலங்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் தங்கவேலுக்கு கொரோனா தொற்று உறுதி!

அதிமுக வேட்பாளர்

ஆலங்குடி தொகுதி அதிமுக வேட்பாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 • Share this:
  ஆலங்குடி தொகுதி அதிமுக வேட்பாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட ஆலங்குடி தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட்ட தர்ம தங்கவேல் இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் அவருக்கு கொரோன பரிசோதனை செய்யப்பட்டது.

  இந்நிலையில் இன்று காலை அவருக்கு கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அதிமுக வேட்பாளர் தங்கவேல் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  தர்ம தங்கவேல் அதிமுக வேட்பாளராக ஆலங்குடி தொகுதிக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் போர்க்கொடி தூக்கிய நிலையில் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு அதிமுகவினரை சமாதனம் செய்து அவரையே வேட்பாளராக அறிவித்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

  செய்தியாளர் - அரவிந்த்
  Published by:Esakki Raja
  First published: