Home /News /tamil-nadu /

செஸ் ஒலிம்பியாட் தலைவர் நாளை முதல்வர் ஸ்டாலின் உடன் ஆலோசனை

செஸ் ஒலிம்பியாட் தலைவர் நாளை முதல்வர் ஸ்டாலின் உடன் ஆலோசனை

தமிழக முதலமைச்சருடன் ஆலோசனை

தமிழக முதலமைச்சருடன் ஆலோசனை

நாளை காலை செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தலைவர் முதலமைச்சரை சந்தித்து போட்டி நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நகராட்சி சார்பில்  7.50 லட்சம்  ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட உயர்மின் கோபுர விளக்கை தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று தொடங்கி வைத்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மெய்யநாதன், பேசுகையில், செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் தமிழக முதலமைச்சரின் நேரடி பார்வையில் நடைபெற்று வருகிறது. அதற்கான நிதியை தமிழக முதலமைச்சர் ஒதுக்கியுள்ளார். நாளை காலை செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தலைவர் முதலமைச்சரை சந்தித்து போட்டி நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார், இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகத்திற்கே முன்னுதாரணமாக திகழும் தமிழக முதலமைச்சர் தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய எந்த ஒரு அபாயகரமான திட்டத்திற்கு அனுமதி அளிக்க மாட்டார்.,

சுற்றுச்சூழலை காக்க கூடிய மனிதர்களைத் தாண்டி அவர் செயல்பட்டு வருகிறார், நெகிழி இல்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதே தமிழக முதலமைச்சரின் நோக்கம், நெகிழி பயன்பாட்டை தடுக்க வேண்டுமென்றால் ஒவ்வொரு மக்களிடத்திலும் மாற்றம் வரவேண்டும் மாற்றம் வந்தால் மட்டுமே நெகிழியை முற்றிலுமாக ஒழிக்க முடியும், வரக்கூடிய இரண்டு ஆண்டுகளில் நெகிழி இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்.

ALSO READ |  டிரெய்லர்க்கே திமுக அரண்டு விட்டது, இன்னும் முழு படத்தை காண்பித்தாால் அவ்வளவு தான் - கடம்பூர் ராஜூ விமர்சனம்
 புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கடந்த ஆட்சி காலத்தில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்க ஒரு கோடி ரூபாய் நிதி வசூல் செய்து பொதுப்பணித்துறை சார்பில் டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அந்த உள்விளையாட்டு அரங்கில் மதிப்பு 4 கோடியே 60 லட்சம் அதை ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் எடுக்க முடிவு செய்திருந்த நிலையில் குளறுபடியால் பொதுப்பணித்துறை சார்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது.


தற்போது பணி செய்து வந்தவர்கள் பணம் பெற முடியாமல் பணியையும் தொடர முடியாமல் பாதியிலேயே நின்று வருகிறது. இது குறித்து தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

 

செய்தியாளர் : ர.ரியாஸ் , புதுக்கோட்டை
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Chess

அடுத்த செய்தி